
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா.அருள்மொழி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக, மருத்துவர் ராமதாசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“காடுவெட்டி ஜெ.குரு” மறைந்த பிறகு வன்னியர் சங்கத்தில் 4 செயலாளர் பதவிகளை உருவாக்கி அதில் முதன்மை செயலாளராக இருந்து வந்த பு.தா.அருள்மொழி தற்போது வன்னியர் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில்…
வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக உள்ள திரு. பு.தா. அருள்மொழி அவர்கள் இன்று முதல் வன்னியர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார். வன்னியர் சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – என்று தெரிவித்துள்ளார்.