
தென்காசி புதிய மாவட்டத்திற்கான புதிய கட்டிடங்கள் கட்ட வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு, தென்காசி புதிய மாவட்டமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய மாவட்டத்திற்கான புதிய கட்டடங்கள் கட்ட இடங்களை பல்வேறு கட்டமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், உயர் அதிகாரிகளுடன் இலத்தூர், ஆய்குடி, கொடிக்குறிச்சி, பாட்டாக்குறிச்சி, கம்பளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



