பிரிட்டனைச் சேர்ந்த பஞ்சாபி பாடகி தரண் கவுர் தில்லான், சீக்கியர்களுக்குக் காலிஸ்தான் தனிநாடு அமைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துச் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.
சீக்ஸ் ஃபார் பஞ்சாப் என்னும் அமைப்பு சீக்கியர்களுக்குக் காலிஸ்தான் தனி நாடு அமைப்பது குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பஞ்சாபி பாடகி தரண் கவுர் தில்லான், பொதுவாக்கெடுப்புக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துப் பல்வேறு வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி பிந்தரன்வாலேயேப் புகழ்ந்து கூறும் பாடல்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.



