நீட் குறித்து சூர்யா பேச இதுதான் காரணமா?

உரத்த சிந்தனை கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

act surya - 2026

நீட் தேர்வு குறித்துப் பேசி, கடும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சூர்யா. அவர் யாருக்காகப் பேசுகிறார்; என்ன பின்னணியில் பேசுகிறார் என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், தாம் ஏன் நீட் குறித்து கவலைப் பட்டோம் என்பதற்கு ஒரு விளக்கத்தை டிவிட்டர் பதிவில் அளித்துள்ளார் சூர்யா. நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரைக் கூட மருத்துவக்கல்வியில் தம்மால் சேர்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப் பட்டிருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவில், நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட தம்மால் மருத்துவக் கல்வியில் சேர்க்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா!

அவரது டிவிட்டர் பதிவில் இரண்டு பக்கத்துக்கு வெளியிட்ட தகவலில், சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்; தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளிக்கும் வகையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசின் இணையத்தில் பதிவிடவேண்டும்.

நீட் தேர்வு அறிமுகம் ஆவதற்கு முன்னர் அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர உதவினேன். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு அரசுக் கல்லூரி மாணவர் ஒருவரை கூட எனது அறக்கட்டளையால் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

அட… நீட் தேர்வுக்கு வாய்ஸ் கொடுப்பதற்கு இதான் காரணமா என்று தோன்றுகிறதா?! நிச்சயமா இல்லை! அவர் பேசிய மேடையும், மேடையில் இருந்த மனிதர்களும், அவர்களின் கருத்தோட்டங்களும், சூர்யா பேச்சின் பின்னணியை அப்பட்டமாகக் காட்டிவிட்டன. இருந்தாலும், தமது கருத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை அடுத்து, சூர்யா இப்போது விளக்கங்களைக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். அதில் ஒரு விளக்கம் இப்போது இவ்வாறு வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.