செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி சுந்தரராஜபெருமாள் கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இன்று நாடுமுழுவதும் கேரள மக்களின் சிறப்பு விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு பூமிநீளா சமேத சுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்
9ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை விழாவில் காலை 6மணிக்கு கோவில் வளாகத்தில் பணிநிறைவு பெற்ற ஆசிரியா் ஆறுமுகம் தலைமையில் கேரள பாரம்பரிய உடையணிந்து வந்த பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு சுவாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகை வாழ்துக்களை பரிமாறிக்கொண்டனா்.
அதனைதொடா்ந்து காலை 10.45மணிக்கு பூமிநீளா சமேத சுந்தரராஜபெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வாசனா திரவியங்கள், மற்றும் மஞ்சள், சந்தனம், பால்,தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 11.15மணிக்கு சுவாமி,அம்பாள், பரிவார தேவதைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு காலை 11.30க்கு சிறப்பு தீபஆராதனை நடந்தது.
பின்னா் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, இரவு 7.35மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு மஹாதீபாரதனை நடந்தது. விழாவில் பண்பொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.