தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sheila dikshit - 2026

தில்லி மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் சனிக்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 81.

உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் இன்று காலை அனுமதிக்கப் பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மாலை 3.30 மணி அளவில் காலமானார். கடந்த 1998 முதல் 2013ம் ஆண்டு வரை தில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித்.

அவரது மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், தில்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத் தக்க பங்களிப்பு செய்தவர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.