உலகின் கௌரவம்! ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்ற சச்சின்!

Published:

sachin tendulkar award - 2026

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டி அவருக்கு கிரிக்கெட் உலகின் உயரிய விருதான “ஹால் ஆஃப் ஃபேம்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி.

உலக கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மக்களால் மறக்க முடியாத கிரிக்கெட் வீரராகத் திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். 90 களில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மட்டையை எடுத்து கொண்டு வீதிக்கு வரக் காரணமாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 100 சதம் அடித்து உலக சாதனை படைத்தவர்.

சச்சினின் கடந்த கால சாதனைகள் இந்திய அணியை உலக கிரிக்கெட் தர வரிசையில் முதலிடத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது. சச்சினின் இந்த சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி வழங்கும் உயரிய விருதான “ஹால் ஆஃப் ஃபேம்” விருதினை அவருக்கு வழங்கி கௌரவப் படுத்தியுள்ளது ஐசிசி.

sachin tendulkar - 2026இந்திய அணியில் “ஹால் ஆஃப் ஃபேம்” வாங்கும் வீரர்களில் சச்சின் ஆறாவது நபர். இதற்கு முன் பிஷன் சிங், கபில் தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தற்போது, சச்சினுடன், தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன்டொனால்ட் மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img