கேஸ் சிலிண்டா் விலை வெகுவாக குறைப்பு.! வியாபாரிகள் மகிழ்ச்சி…!

அடடே... அப்படியா? இந்தியா தமிழகம் பொது தகவல்கள்

GES S - 2026

மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.62.50 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை பொறுத்து இந்தியாவில் அதன் விலையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் ரூ.62.50 குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.574.50ஆக இருக்கும்.

இந்த மாதத் தொடக்கத்திலும் எல்பிஜி விலை ரூ.100.50 குறைக்கப்பட்டது.

அதையும் சேர்த்து கணக்கிட்டால், மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை மொத்தம் ரூ.163 குறைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

முதலில் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்க வேண்டும்.

பின்னர் மானியம் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

12-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்கினால் சந்தை விலையிலேயே அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடபட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.