கீழப்பாவூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு
நடந்துள்ளது. ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை
போலீசார் தேடி வருகின்றனர்
கீழப்பாவூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (72). இவரது தம்பிகள்
நரசிங்கம் (50, சேதுராமசாமி (47) இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஒரே
வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர் இவர்கள் வீட்டு
திருமணத்திற்காக வாங்கி வைத்த 30 பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள், மற்றும்
ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில்
வைத்திருந்துள்ளார்கள் சனிக்கிழமை இரவு அனைவரும் தங்களது அறைகளில்
தூங்கிக்கொண்டிருந்துள்ளனர், வீட்டின் மொட்டை மாடி வழியே வீட்டிற்குள் நுழைந்த
கொள்ளையர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கம் பூட்டி விட்டு
திறந்தே இருந்த பூஜை அறையில் நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, 15
கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று
விட்டனர் காலையில் எழுந்து பார்த்த போது நகை, ரொக்கம் திருட்டு போனது கண்டு அதி
ர்ச்சியடைந்த சங்கரநாராயணன் குடும்பத்தினர் பாவூர்சத்திரம் போலீஸில்
புகார் செய்தனர்
மேலும் புதுஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (45) மின்
வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு
குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு சென்று இருந்தராம். சனிக்கிழமை இரவு
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை
உடைந்து உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க
சங்கிலியை திருடிவிட்டு சென்று விட்டனராம்.
இதே போல் சப்பாணி முத்து முதலியார் தெருவில் பாலசுப்பிரமணியன் (59) மகள்
சுமித்ரா. என்பவர் ஹோமியோபதி நடத்தி வருகிறார் சனிக்கிழமை இரவு கிளினீக்கை
பூட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் காலையில் சென்று பார்த்த போது கிளினீக்கின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே மேஜையில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது சான்றிதழ்கள் திருடி போய் இருந்தனவாம்.
இது குறித்தும் பாவூர்சத்திரம் போலீஸில் புகார் அளித்துள்ளனர் ஒரே நாள் இரவில் கீழப்பாவூரில்
அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டார் உடன் ஆலங்குளம் டிஎஸ்பி சங்கு மற்றும் பாவூர்சத்திரம்
சப்-இன்ஸ்பெக்டர் ஹபிபுல்லா மற்றும் காவலர்கள் உடனிருந்தனர் இச் சப்பவங்கள்
குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்




