பல தேவர்களை உற்பத்தி பண்ண முடியாத மலடி அல்லள் பாரத மாதா!

துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

pasumpon thevar - 2026

பல தேவர்களை உற்பத்தி பண்ண முடியாத மலடி அல்ல பாரத மாதா!

என்னுடைய உயிரோ பிரயாணமோ பக்கத்தில் இருப்பவன் பந்தோபஸ்து கொடுப்பதால் காப்பாற்றப் படுவது அல்ல! ஆண்டவன் கிருபையால் அடியேனுக்கு மன தைரியமும் சரீர பலமும் ராணுவ முறையும் மூன்றும் ஏக தேசமாக கலந்தே இருக்கிறது!

ஒருவனுக்கு தைரியம் இருக்கும் சரீர பலம் இருக்காது; நல்ல சரீரம் இருக்கும் தைரியம் இருக்காது; இத்தனையும் இருக்கும் நவீன முறை தெரியாது !இத்தனையும் இருக்கும் ஆனால் ஏழையாக இருப்பான்! அடியேனுக்கு குடிக்க கொஞ்சம் கஞ்சியும் இருக்கிறது!

ஆகையால் என்னை யாரும் பாதுகாக்க தேவையில்லை. மனித முறையில் என்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும். முடியாத நிலையில் என் உயிர் போகும்! ஆனால் என் ஆவி வீணாகப் போகாது!

ஒரு பகத்சிங் ஒரு குமரன் ஒரு யதீந்த்ரநாத் தாஸ்…  போன்ற தேசாபிமானிகள் உயிர்விட்ட தியாகம்தான் ஆங்கிலேயனை இன்றைக்கு லண்டனில் போய் இருக்கும் படியாக செய்திருக்கிறது! அதே போல அப்படியே உயிர் போக வேண்டும் என்ற திட்டம் இருக்குமேயானால் என் உயிர் போய் விடுவதால் தமிழ்நாடு ஒன்றும் கஷ்டப்பட்டு போய்விடாது!

பல தேவர்களை உற்பத்தி பண்ண முடியாத மலடி அல்லள் பாரத மாதா!

– பசும்பொன் ஸ்ரீமுத்துராமலிங்க தேவர்!

devar ponmozhi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.