தெற்கு கர்நாடகாவில் ’மஞ்சள்’ எச்சரிக்கை ! 9 பேர் உயிரழப்பு !

இந்தியா பொது தகவல்கள்

karnataka - 2026வெள்ளத்தால் சூழ்ந்துள்ள வட கர்நாடகத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்துக்கு விநாடிக்கு 3.85 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வட கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கர்நாடக பகுதியில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.karnataka 1 - 2026பெலகாவி மாவட்டத்தில் உள்ள அல்மாட்டி அணைக்கு விநாடிக்கு 3,36,917 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,55,340 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல, நாராயணபுரா அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3.90 லட்சம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 4,09,640 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 492.25 மீட்டரில் 488.28 மீட்டர் ஆக உள்ளது.

வட கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருதையொட்டி, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தக்சிண கர்நாடக பகுதியில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வட கர்நாடகம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாக்க பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்களை 080- 23417100 என்ற தொலைபேசி எண்ணிலும், 8277894666 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.