பிரதமர் மோதியின் ‘ஆத்மநிர்பர்தா’, ஆக்ஸ்போர்ட் அகராதியின் 2020ன் சிறந்த ஹிந்தி சொல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
aatmanirbharta
aatmanirbharta

பிரதமர் நரேந்திர மோதி பிரபலப் படுத்திய ‘ஆத்மநிர்பர்தா’ என்ற சொல், 2020ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்தி சொல்லாக, ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு அறிவித்துள்ளது. ‘ஆத்மநிர்பர்தா’ என்பது, தற்சார்பு – சுயசார்பு என்ற பொருளில் வரும். இந்தச் சொல்லைத் தான், 2020ம் ஆண்டின் சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்ட் மொழிகள் அமைப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு அகராதி குழுமத்தின் ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொற்களைத் தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது. அதன்படி ஹிந்தி மொழியில் மிகச் சிறந்த சொற்களாக 2017ல் ஆதார், 2018ல் நாரீசக்தி (மகளிர் சக்தி), 2019ல் சம்விதான் ஆகிய சொற்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது, 2020ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்திச் சொல்லாக, ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு இது குறித்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், உலகெங்கும் கோவிட் 19 வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, இந்தியாவும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. ஆயினும் அந்த நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ‘ஆத்மநிர்பர்தா’ என்ற சொல்லை பிரபலப் படுத்தினார். அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

நாடு, பொருளாதாரம் சமூகம் மற்றும் தனிநபர்கள் சுயமாகவே இந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோதியால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. அது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தைத் தந்துள்ளது.

ஆத்மநிர்பர்தா என்ற சொல் இந்திய மக்களின் குரலாக விளங்கியது. எனவே 2020ஆம் ஆண்டின் சிறந்த ஹிந்திச் சொல்லாக ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.. என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.