விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்!

கோவை சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vijaya prabakaran engagement - 2026

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.

கோவை, பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளரான இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனா, திருச்சி சாலையில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாராம். இவரும் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது .

இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்வு, வெள்ளிக்கிழமை மணப்பெண்ணின் வீட்டில் எளிமையாக நடைபெற்றது.

விஜய பிரபாகரனின் தாயார் பிரேமலதா விஜயகாந்த், தம்பி சண்முக பாண்டியன், மாமா சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் சிலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.