தினமும் ஓரை பார்த்து பயன் பெறுவோமா?

ஆலோசனைகள் கட்டுரைகள் ஜோதிடம் லைஃப் ஸ்டைல்

astrology main - 2026

ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் ஏற்படும் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்ய காலம் நடைபெறும். இதைத் தான் அந்த கிரகத்தின் ஆதியபத்தியத்தின் ஓரை என்று கூறுவர்.

எந்தக் கிழமையில் சூரிய உதயமாகிறதோ அந்தக் கிழமையின் உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.

இன்று புதன் கிழமை என்றால்… காலை 6 மணி முதல் 7 மணி வரையில் புதன் ஆதிபத்தியம் செய்வதால் அது புதன் ஒரை ஆகிறது.

இப்படி அடுத்தடுத்து 1 மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல் ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு ஓரையில் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

சூரிய ஓரை :
விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏறிடல், போன்றவை செய்தல்

சந்திர ஓரை :
திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப்பயணம் தொடங்குதல், கால்நடை வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை :
போர்க் கருவிகள் வாங்குதல், வாகனங்கள் பழுதுபார்த்தல், போர் தொடுத்தல், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல் , மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம்.சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை:
ஜோதிடம் ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதக் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருட்கள் வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம் .

குரு (வியாழன்) ஓரை :
புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்க தொடங்குதல், வர்த்தக கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல் , கேட்டல் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை :
கலைகளை கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுள் செய்தல், காதல் செய்ய, மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம் .

சனி ஓரை :

உழுதல், எருவிடுதல், இரும்பு, மின் சாதனங்கள் வாங்குதல், தோப்பு (காடுகள்) கிணறு அமைத்தல் பயணம் செய்தல் போன்றவை செய்யலாம் .

தகவல்:
பரிகார ஜோதிடர் S.காளிராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 98437 10327 / 82201 63376

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.