திருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் : 1) ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான் , ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும். 2 ) ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம் , இனிமையாக பேசும் தன்மை , மனைவியை உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை , நல்ல பாரம்பர்ய குடும்பத்தை சார்ந்த அமைப்பு , மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும் தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார். 3 ) ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் . மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும் பல பேர் உதவி செய்வார்கள் . ( சில பேர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க .) https://jothidadeepam.blogspot.in/2012/05/blog-post_29.html 9443355696
திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari