
ராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..
ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)
அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.
லக்னம் 05.14 | (செவ்வாய்) 02.40 | ராகு 29.59.99 | |
கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு | சுக்ரன் 25.05 | ||
(சனி) 01.14 | |||
குரு 23.27 | சந்திரன் 29.44 கேது 29.59.99 | புதன் 01.20 | சூரியன் 06.48 |
தனூர் :
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):
55/100
ஏதோ சுமார் என்றவகையில் இதுவரை இருந்துவந்த நீங்கள் இனி உற்ச்சாகம் பெறுவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு 6லும் கேது 12லும் வருவது பலவித நன்மை தரும். நோய் அகலும், கடன் தீரும், எதிரிகள் தொல்லை நீங்கும், சுப செலவுகள் உண்டாகும். மேலும் ராசிநாதன் குரு 2ல் அக்டோபர் முதல், 5க்குடைய செவ்வாய் ஆட்சி, மற்ற கிரஹங்கள் சஞ்சாரமும் நல்லபடியாக இருக்கு. குடும்ப ஸ்தானாதிபதி சனி ஆட்சி. குடும்பத்தில் மகிழ்ச்சி பொருளாதார நிலை உயருதல் என்று இந்த பெயர்ச்சி முழுவதும் நன்றாகவே இருக்கும். பெரிய கஷ்டங்கள் வராது. 02.06.2021 முதல் 09.02.22 வரையில் கொஞ்சம் கவனம் தேவை புதன், சுக்ரன், சூரியன் மற்றும் கேதுவின் சனி நக்ஷத்திர காலில் சஞ்சாரம் இவை நன்மை செய்யவில்லை. பொறுமை நிதானம் இருந்தால் வெற்றி பெறலாம்.
குடும்பம் & பொருளாதாரம் : குருவும் சனியும் 2ல் சஞ்சாரம் கேதுவின் பார்வையும் பெறுவது 7க்குடைய புதன் சஞ்சாரம் என்று மகிழ்ச்சியான நிலை இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கேளிக்கைகள் விருந்து என்று 02.06.2021 வரை நன்றாக இருக்கும் அதன்பின் 09.02.22 வரை கொஞ்சம் மன சஞ்சலம், குழப்பம் சச்சரவுகள் என்று இருக்கும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவி பிணக்கு அல்லது பிள்ளைகளால் கஷ்டம் என்று இருக்கும் பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். 09.02.2022க்கு பின் நல்ல நிலமை பொருளாதார சீரடைவு, மகிழ்ச்சி என்று இருக்கும்.
உடல் ஆரோக்கியம் : 6க்குடைய சுக்ரன் சஞ்சாரம் நன்றாக இல்லை அதனால் அவ்வப்போது உஷ்ணம் குடல் பிரச்சனைகள் கண் தலை போன்ற பாதிப்புகள் இருக்கும். 7க்குடைய புதன் நக்ஷத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் வரை வாழ்க்கை துணைவர் உடல் நலமும் பாதிக்கும் சனி கேது சம்பந்தப்படுவதால் பெற்றோர் உடல் நலத்திலும் அக்கறை கொள்ளவேண்டும். 09.02.22க்கு பின் நல்ல நிலை.
உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): மூன்று கால கட்டங்களாக உங்கள் உத்தியோக நிலை இருக்கும். இப்பொழுது முதல் 02.06.2021 வரை உத்தியோகம் நன்றாக இருக்கும் பதவி உயர்வு, பணவரவு, நல்ல வேலை என்று இருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றம் பெறுவர். சொத்து சேரும் வீடு வாகன யோகங்கள் நன்றாக இருக்கும். 02.06.2021 – 09.02.2022 வரையில் மற்ற கிரஹ சஞ்சாரங்கள் நன்றாக இல்லை அதனால் வேலையில் சிரமங்கள், பளு, மன அழுத்தம், உடன் வேலைசெய்வோரால் சங்கடம், வேண்டாத இடமாற்றம், வழக்குகள், கெட்ட பெயர் சிலருக்கு வேலை இழப்பு என்று இருக்கலாம். நிதானமும் பொறுமையும் வார்த்தைகளை விடுவதில் கவனமும் தேவை. அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். 09.02.22க்கு பின் நல்ல நிலை மீண்டும் மகிழ்ச்சி உத்தியோகத்தில் முன்னேற்றம் என்று இருக்கும்.
சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல் அனைத்து தொழிலும்) : இந்த பெயர்ச்சி ஆரம்பம் நன்றாக இருக்கிறது. தொழிலில் நல்ல வளர்ச்சி பொருளாதாரம் ஏற்றம் நல்ல லாபம், தொழில் விஸ்தாரணம், கடன் கிடைத்தல், பெயர் புகழ் என்று இருக்கும். 02.06.2021 – 09.02.22 வரை கொஞ்சம் கவனம் தேவை புதிய முயற்சிகளை தகுந்த ஆலோசனையுடன் செய்யவும். கொடுக்கல்வாங்கலில், பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை எவரையும் சட்டென்று நம்பிவிட வேண்டாம். தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும் 09.02.22 முதல் நல்ல நிலை உற்ச்சாகம் புதிய தொழில் தொடங்குதல் லாபம் என்று இருக்கும்.
மாணவர்கள் : படிப்பில் உற்ச்சாகம் உண்டாகும் அடுத்த 8மாதம் கேது புதனின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், புதன் லாபத்தில் இருப்பதாலும், மற்ற கிரஹ சஞ்சாரங்களும் 5க்குடையவர் பார்வை இவைகள் விரும்பிய பாடம், கல்லூரி கிடைத்தல் நல்ல மதிப்பெண்கள் பெறுதல், ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுதல் போட்டி பந்தயங்களில் வெற்றி என்று இருக்கும். 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் மந்த நிலை அல்லது படிப்பில் கவனம் சிதறுதல் போன்றவை இருக்கும் தகுந்த ஆலோசனை இறைத்யானம் இவை இதை போக்கும். பின் நல்ல நிலை உண்டாகும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM