தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: மேஷம்

new year palangal 2021 - 2026

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2026

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


1 mesham
1 mesham

மேஷம் : (அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

சித்திரை – ஆடி வரையில்:  உங்கள் ராசிநாதன் வருட ஆரம்பம் மிதுனத்தில் 3ல் ப்ரவேசம் பின் வைகாசி மத்தியில் கடகம், ஆடியில் சிம்மம் பிரவேசித்து மற்ற கிரஹங்களுடனான இணக்கமான நிலையால் இந்த வருடம் பொருளாதாரம் மிக சிறந்து விளங்கும்.

ஜீவன வகையில் ஆதாயம் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள், குழந்தை பாக்கியம், உழைப்பில் லாபம் என்று பணம் வரும், உத்தியோகம் தொழில் வகையில் நல்ல முன்னேற்றம் காணும். விரும்பிய இடமாற்றம், உத்தியோக உயர்வு, தொழில் விஸ்தரிப்பு என நல்ல நிலையும் இருக்கும். பணப்புழக்கம் தாராளம், எதிர்பாரா இனங்கள் மூலம் வருவாய் வரும். இதுவரை தடைபட்டுவந்த செயல்கள் யாவும் வெற்றியை தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

மனம் குதூகலம் அடையும் புகழ், அதிகாரம் கிடைக்கும். பெரியதாக கஷ்டம் இருக்காது. குடும்ப ஒற்றுமை குதூகலம் இருக்கும். புதுவீடு குடிபோகுதல், திருமணம் குழந்தை பாக்கியம் உண்டாகுதல் என்று இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெற்றோர் வழியில் கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கும். 

மாணவர்கள் கல்வி நன்றாக இருக்கும். விரும்பிய பாடம், கல்லூரி என்று கிடைக்கும் பெற்றோர் ஆசிரியர் பாராட்டு கிடைக்கும். அனைத்து பிரிவினருக்கும் நன்மை உண்டாகும். எண்ணங்கள் பூர்த்தியாகும்.  வியாதிகள் பூரணமாக விலகும். நன்மை அதிகம்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: கிரஹ சஞ்சாரங்கள் கொஞ்சம் கலந்த நிலையில் இருப்பதால் ஆவணி 30 முதல் கார்த்திகை 4 வரையில் (14.09.21-20.11.21)  வரையில் கொஞ்சம் இழுபறி இருக்கும் தொழில்கள் தேக்கம் அடையும். கடன்வாங்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் தாமதப்படும். அனைத்து பிரிவினரும் சிக்கனமாக இருப்பதும் கூடுமான வரையில் கடன் வாங்காதிருப்பதும் நலம். தரும்.  பொருளாதார தேக்கம் வரும். தேவைகளை சுருக்கி கொள்வதும். உடல் ரீதியான மருத்துவ செலவுகளும் வாழ்க்கை துணை, பெற்றோர் வகையிலும் மருத்துவ செலவுகள், வீன் வழக்கு என்று சில பிரச்சனைகள் வரலாம். எதிலும் நிதான போக்கு கடைபிடிப்பது நலம் தரும். இருந்தாலும் சூரியன் மற்றும் சனியின் பார்வைகள் ஓரளவு நல்லதும் செய்யும் துன்பங்கள் குறையும். பொதுவாக இந்த நான்கு மாதங்கள்  அவரவர் ஜாதக கிரஹ பலத்தை பொறுத்து கொஞ்சம் அல்லது அதிகம் தீமை என்ற நிலை இருக்கும். எனினும் கவலை படாமல் எதையும் தகுந்த ஆலோசனை பெற்று செய்வதும், வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

மார்கழி முதல் பங்குனி வரையில் : குரு சஞ்சாரம், ராகு-கேது அடுத்தராசிக்கு பெயறுமுன் 4மாதங்கள் முன்பாக பலன் என்ற வகையில் ஓரளவு ஜென்ம ராகு நன்மை தந்தாலும் 7ல் கேது வாழ்க்கை துணைவர் நலம் பாதிப்படையலாம், குருவும் 12ல் சுப செலவுகள் என்ற வகையில் இல்லத்தில் திருமணம் சுப காரியங்கள் என்ற வகையில் பணம் செலவாகும். அதே போல் ராசி நாதன் துலாம் முதல் கும்பம் வரையில் இந்த காலங்களில் சஞ்சரிக்கிறார் அது ஓரளவு நன்மை தருவதால் முன்னேற்றம் இருக்கும். சூரியன் தன்பங்குக்கு நன்மை தருவதால் பொருளாதாரம் சீராக இருக்கும். மற்ற கிரஹங்களும் பரவாயில்லை என்பதால் உத்தியோகத்தில் கடும் முயற்சிக்கு பின் பதவி,சம்பள உயர்வு என கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவணங்கள் ஓரளவு லாபம் வரும் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொண்டால் பிரச்சனை இல்லை அனைத்து பிரிவினருக்கும் கஷ்டம் இல்லை எனினும் மெதுவாக செல்லும் சேமிப்பு வழக்கம் இருந்தால் நன்மை இருக்கும் பண கஷ்டம் ஏற்படாது. ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

பொதுவில் முதல் நான்கு மாதம் சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் வழக்கத்தை கொண்டால் அடுத்த எட்டு மாதங்கள் பெரிய தொல்லைகள் இருக்காது. தனிப்பட்ட ஜாதக கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் நிச்சயம் பெரிய கஷ்டம் இல்லை.

பிரார்த்தனைகள்: ஆண்டு தொடக்கம் நன்றாக இருப்பதால் சூரிய நமஸ்காரம் தினம் செய்ய தொடங்குங்கள். மேலும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம் இவற்றை செய்வது நலம் பயக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories