பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரைக் காணவில்லை!
எதிர்பார்த்தபடி, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டசபைக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார் எடியூரப்பா. உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி, வாக்கெடுப்பு ஊடகங்களில் நேரலை செய்யப்படுகிறது.
கர்நாடக தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்
மக்களிடம் நம்பிக்கை இழந்து, கர்நாடக ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப் பட்ட காங்கிரஸால், தங்களுக்கு ஏற்பட்ட நிலையை ஜீரணிக்க இயலாமல், அனைத்து வழிகளையும் கையாண்டு, பாஜக.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. இது கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மஜத., காங்கிரஸ் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அனுபவ காங்கிரஸின் சதிவலை; அதை உடைக்கும் பாஜக.,! என்னதான் நடக்குது கர்நாடகத்தில்?
காங்கிரஸ், மஜத.,வில் இருந்து 10 பேரின் ஆதரவை பாஜக., பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. மைசூரு பகுதியில் மஜத., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே, பாஜக., அங்கே பிரபலமில்லாத, தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தையும் பெரிதாகச் செய்யவில்லை. இதனால், மைசூரு பகுதியில் இருந்து தேர்வான மஜத., உறுப்பினர்கள் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று பரபரப்பு நிலவுகிறது.
திக் திக் திருப்பங்கள்; நாடே எதிர்பார்க்கும் நான்கு மணி! என்ன ஆவார் எடியூரப்பா?
இத்தகைய சூழலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் எடியூரப்பா, காங்கிரஸ் உருவாக்கியுள்ள இந்தச் சதி வலைச் சூழலை வென்றெடுப்பாரா, அல்லது அரசு வேண்டாம் என்று காங்கிரஸ் மஜத,. சந்தர்ப்பவாத அரசியலை வெற்றி பெறச் செய்வாரா என்பது தெரிந்துவிடும்.
நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை
எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது
திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்
வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
குமாரசாமி முதல்வர் என பேரம் பேசியபோதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது: ராகுலுக்கு அமித் ஷா பதில்
இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.
சாகர் புயல் உருவாகியுள்ளது; மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்த வரை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தைப் பொருத்த வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார் பாலசந்திரன்.
காவிரி வாரியமா? ஆணையமா? என்ன பெயர் வைத்தது மத்திய அரசு?
நாளை தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்… ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!
ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்... ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!
செத்தாலும் காங்கிரஸுடன் சேர மாட்டேன்னீங்களே குமாரசாமி… இப்போ செத்துட்டீங்களா?!
இது குறித்த வீடியோ பதிவுடன், பல்வேறு கருத்துகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன... தேர்தலுக்கு முன் அப்படி சொல்லிவிட்டு, மறுநாளே சேர்ந்துட்டியே... நீ செத்துட்டியா என்று பலரும் டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடியூரப்பா! தலைவர்கள் வாழ்த்து
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக இன்று காலை எடியூரப்பா பொறுப்பேற்றார். அவருக்கு முக்கியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
