கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்தான் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக., தலைவர் அமித்ஷா. குமாரசாமியே முதல்வர் என அறிவித்து பேரம் பேசியபோதே, காங்கிரஸ் ஒரு ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி விட்டது என அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் தற்போது நடைபெறும் சம்பவங்களின் மூலம், இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடி ரூபாய் தருவதாகக் கூறி பாஜக பேரம் பேசுவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறுவதை ராகுல் சுட்டிக் காட்டி தன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.
அவரது டிவிட்டர் பதிவு:
The ‘Murder of Democracy’ happens the minute a desperate Congress made an ‘opportunist’ offer to the JD(S), not for Karnataka’s welfare but for their petty political gains. Shameful!
— Amit Shah (@AmitShah) May 17, 2018




