Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 அரசே வழங்கும்: எடப்பாடி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தாங்கள் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு, திருத்தம் செய்யவோ தடை விதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி உடனடியாகக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த வருடம் முதல் எந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன தெரியுமா?

நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!

திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் விசாரணை நிறைவு?

ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனிடம் தாம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறிய சந்தானம்,

திரிஷா பிறந்த நாளை டிவிட்டரில் கொண்டாடும் இணைய ரசிகர்கள்

திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு என்றே ஒரு ஹாஷ் டாக் உருவாக்கப் பட்டு, அது டிரெண்டிங்கில் விடப்பட்டது. #HappyBirthdayTrisha என்ற அந்த ஹாஷ் டாக் போட்டு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சசிகலாவிடம் ‘ஜெ’ சிடிக்கள் நிறைய இருக்கும்: அதில் ஒன்றைத் திருடி வெளியிட்டு தினகரன் ஆர்கே.நகரில் வென்றார்: திவாகரன்

இந்நிலையில், சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை திருடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் மேலும் பல சிடிக்கள், சசிகலாவிடம் இருக்கலாம் என்று ஒரு தகவலையும் கூறினார்.

16 ஆயிரம் கிராமங்கள்; 2022க்குள் வளர்ச்சி இலக்கு: நிர்மலா சீதாராமன்

விருதுநகர்: மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என்று ஆய்வு செய்ததாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர்...

திருநாவுக்கரசரும், ஸ்டாலினும் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக.,வின் செயல் தலைவருமான  ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக., ஆளும் மாநிலங்களில் மக்களும், காங். மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்: மோடி

பாஜக., எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார் மோடி.

அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆதார் முறை உகந்தது: சொல்பவர் பில்கேட்ஸ்

ஆதார் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம் எனக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், பிற நாடுகள் ஆதார் நடைமுறையை அப்படியே பின்பற்றுவதற்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

ரயில் கழிப்பறையில் வைத்து டீ கலந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அதன்படி, வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல் - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது 2017 டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இது குறித்து வந்த புகாரை அடுத்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது.

Categories