spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாஜக., ஆளும் மாநிலங்களில் மக்களும், காங். மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்: மோடி

பாஜக., ஆளும் மாநிலங்களில் மக்களும், காங். மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்: மோடி

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி, இன்று கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில், குல்பர்கா என்று வழங்கப்பட்ட கலபுர்கியிலும், பெல்லாரியிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.  அப்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் மக்கள் ஆதரவளிக்கின்றனர். வெவ்வேறு வயதினரும் கூட்டங்களுக்கு வந்து பாஜக.,வுக்கு ஆதரவு தருகின்றனர். கர்நாடக பாஜக., இத்தகைய ஆதரவாளர்களால் வாழ்த்தப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் மோடி.

கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக அரசு தூங்கிக் கொண்டிருந்தது, அதன் திறன் அப்படி. அதனால் மாநிலம் தொல்லையைச் சந்தித்துள்ளது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஜவுளித் துறை, தொழில்துறை ஆகியவை எல்லாம் இங்குள்ள ஊழலால் தள்ளாடிப் போயிருக்கிறது. எனவேதான் மக்கள் காங்கிரஸை புறந்தள்ளுவதற்குத் தயாராக இருக்கின்றனர் என்றார் மோடி.

வரும் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்த சாதனையை தேசிய ஜனநாயகக் கூட்டணி சாத்தியமாக்கும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக இந்தக் கூட்டணி தொடர்ந்து பணி செய்யும்… என்று உறுதி அளித்தார் மோடி.

பாஜக., எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார் மோடி.

 

பெங்களூருவை சீரமைப்பதில் கர்நாடக பாஜக., அக்கறை காட்டும் என்று கூறியுள்ள மோடி, இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாஜக., பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு நகரமைப்பில் காங்கிரஸ் எவ்வளவுக்கு அலட்சியமாக இருந்துள்ளது என்றும், அதனால் நகரம் மோசமான உள்கட்டமைப்புடன் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் மோடி.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை, காங்கிரஸ் கட்சி மதிப்பதே இல்லை என கலபுர்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா, பின்னாளில் கலபுர்கி என்று பெயர் மாற்றம் பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான குல்பர்கா என்ற கலபுர்கியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் மோடி. அப்போது அவர், ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் தாக்குதலை முன்னெடுத்த போது, அது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி, தம்மிடம் ஆதாரங்களைக் கேட்டதாகத் தெரிவித்தார்.

கர்நாடகா என்றாலே அதன் பொருள் வீரம்தான். ஆனால் ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் கரியப்பாவையும், முன்னாள் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் திம்மையாவையும் காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பது வரலாற்று ஆதாரமாக உள்ளது என்றார் அவர்.

காஷ்மீரின் கத்துவா சம்பவத்தைக் கண்டித்து தில்லியில் மெழுகுவர்த்திகள் ஏந்தி காங்கிரஸ் ஊர்வலம் போனது. அதேநேரம், கர்நாடக மாநிலம் பிடாரில் தலித் சிறுமி சித்தரவதைக்கு உள்ளானபோது காங்கிரஸ் கட்சியின் மெழுகுவர்த்திகள் எங்கே போயின என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.


தொடர்ந்து கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியை, ஊழல் அரசு எனப் பொருள்படும் வகையில், ஹிந்தியில் சித்தா-ரூபையா-சர்க்கார் என வர்ணித்தார் பிரதமர் மோடி.

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் தொடர்ந்து, பெல்லாரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் மோடி. அப்போது அவர், பெல்லாரியின் வரலாற்றுத் தடங்களை காங்கிரஸ் அரசு முற்றிலும் அழித்து விட்டது என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடகாவில் ஊழல் அரசு நடைபெறுகிறது என்று வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். கர்நாடக காங்கிரஸ் அரசு உறங்கும் நிலையில் இருப்பதால், மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியை அது பயன்படுத்தவே இல்லை என பிரதமர் மோடி சாடினார். பின்னர் இதனைத் தம் டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டார் மோடி.

3 COMMENTS

  1. பா.ஜ‌.க.ஆட்சியில் தான் கத்தார், டிமாண்ட் ஸ்டிரேஷன்,சாமான்யர்கள் படும் பாடு எமர்ஜென்சி யில் கூட இல்லை.

  2. The Election Manifesto of the Con party is shocking, to say the least! It’s blatantly divisive and pro-Muslim, which is against the Constitution. Therefore, this divisive Con party should be taught a good lesson by the people!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe