சென்னை: நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவ மாணவியர்க்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது.
வெளி மாநிலங்களில் தேர்வு மையம் போடப் பட்டிருப்பதாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, இந்த அறிவிப்பை தமிழக அரசு செய்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வரின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
வெளி மாநிலத்திற்கு “நீட்” தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் தலா ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறப்பட்டிருந்தது.
வெளி மாநிலத்திற்கு “நீட்” தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), 1/2 #NEET pic.twitter.com/SGqedPEIhE
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 4, 2018




