தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக.,வின் செயல் தலைவருமான ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 4 டிஎம்சி தண்ணீரைத் தருமாறு காங்கிரஸும், திமுக.,வும் கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளகளிடம் பேசிய போது கூறினார்.
குமரி மாவட்டம் கருங்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 150 ஆண்டுகால காவிரிப் பிரச்னைக்கு முந்தைய அரசுகளைப் போல அவசரப் படாமல், மோடி அரசு ஆழமாக யோசித்து முடிவெடுக்கும்; நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாகக் கூறினார்.




