கேட்பவன் கேனையன்னா..! வெளிச்சத்துக்கு வந்த தலிபான் அமெரிக்க ‘பகீர்’ உறவு!

Published:

us taliban relations
us taliban relations

~ செல்வ நாயகம்

“தாலிபானுக்கு அல்-கயீதா, ஐஸிஸ்-கே போன்றவற்றால் தீங்கு நேரலாம். எனவே, தாலிபானுக்கு நம் உதவி தேவை” – அமெரிக்கா!

கேட்பவன் கேனையன் என்றால் என்ன வேணா சொல்லுவாங்களாம்!

2001இல் அமெரிக்க இரட்டை கோபுரங்கள் உள்ளிட்டவற்றை தாக்கியதால் ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் அரசு மீது படையெடுத்து அந்த ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா.

அதே தாலிபானுக்கு அமெரிக்கா இன்று உதவப் போகிறதாம்!
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்: அல்-கயிதா & ஐஸிஸ்-கே மூலம் தீங்கு நேரலாம் என்பது. அல்-கயிதாவும் தாலிபானும் நண்பர்கள், கூட்டாளிகள். பிறகு எப்படி தாலிபானுக்கு அல்-கயிதாவால் பிரச்சினை வரும்?

“பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அடிமை தாலிபான். ஆஃப்கானிஸ்தானில் மட்டும் ஷரியா சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது தாலிபான். தவறு. உலகம் முழுதும் கொண்டு வர வேண்டும் ஷரியாவை” என்று போராடுகிறது ஐஸிஸ்-கே.

ஐஸிஸ்-கேயில் இருப்பவனெல்லாம் ஒரு காலத்தில் தாலிபான் / அல்கயிதாவில் இருந்தவர்கள் தான். கம்பெனி விட்டு கம்பெனி தாவுவது போல, ஒரு பயங்கரவாத இயக்கத்தை விட்டு மற்றொரு இயக்கத்துக்கு மாறுவது இவர்கள் வழக்கம்.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

ஆனால், இது எதுவும் தெரியாத மாதிரி, “நமக்கு கெடுதல் செய்த தாலிபானுக்கு நாம் உதவ வேண்டும்” என்று அமெரிக்கா சொல்வது ஊரை ஏமாற்றும் வேலை.

எல்லாம் ‘செட்டிங்கில்’ தான் போய்க் கொண்டிருக்கிறது போல தெரிகிறது.

தேவையில்லாமல் 20 வருடங்கள் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா உட்கார, அதன் காரணமாக ஏற்பட்ட ‘அமைதியை’ உபயோகித்து ஈரான், சீனா, ரஷ்யா எல்லாம் முன்னேறியுள்ளன. அமெரிக்கா வளராமல் தேய்ந்துள்ளது.

இப்போது இந்த தாலிபான்களை கொண்டு ஈரான், சீனா, ரஷ்யாவுக்கு பிரச்சினையை கிளப்பும் அமெரிக்க என்கிறார்கள்.
ஆரம்பத்தில் தாலிபான்களை ரொம்ப உற்சாகமாக வரவேற்ற சீனா இப்போது பம்முகிறது. சீனாவின் முதலீடுகளுக்கு சிக்கல் ஒரு புறம், சீன உய்கர் பாய்மாருக்கு தாலிபானின் பிரிவு உதவ ஆரம்பித்தால் என்னாகும் என்ற கவலை ஒரு புறம்.

எது நடந்தாலும் பன்றிஸ்தானுக்கு அடி உண்டு. ஏனெறால், ஆஃப்கானிஸ்தான் – பன்றிஸ்தானில் ட்யூரன் லைன் எல்லைக் கோட்டை தாலிபான் ஏற்றுக் கொள்ளவில்லை. பன்றிஸ்தானின் பகுதிகளும் தனக்கு சொந்தம் என்கிறது தாலிபான்.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

அது மட்டுமல்லாமல், பன்றிஸ்தானில் இருக்கும் தாலிபான் பிரிவு (பஷ்ட்டூன்) தங்களை தனி நாடு என்கிறது.

தாலிபான்கள் சன்னி பிரிவினர். பெரும்பாலும் பஷ்டூன்கள். இவர்கள், “நாங்களே உண்மையான ஆஃப்கானிஸ்தான்” என்கிறார்கள். ஆனால், இவர்களை தவிர ஹஸரத் குழு ஒன்று ஆஃப்கானிஸ்தானில் உள்ளது – இவர்கள் ஜெங்கிஸ்கான் வழி வந்தவர்கள் – ஷியா பிரிவு. இவர்களுக்கும் தாலிபான்களுக்கும் ஆகாது.

ஷியா ஈரானுக்கும் – சன்னி தாலிபானுக்கும் ஆகாது.
“எங்கள் போர் முடிந்து விட்டது” என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. ஆனால்…. போர் இனித்தான் ஆரம்பம்!

எனவே, தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன!

குறிப்பு: “இந்தியாவுடன் நட்பை விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம்” என்ற தாலிபான் நேற்று கத்தாரில் இந்திய தூதரை தாமே முன்வந்து சந்தித்துள்ளனர். “ஆஃப்கானிஸ்தானத்தை இந்தியாவுக்கு எதிராக எவரும் உபயோகிக்க விட மாட்டோம்” என்று உறுதி அளித்துள்ளார்கள்.

Related articles

Recent articles

spot_img