prasant kishore - 2026

இம்மாதிரி விஷ ஜந்துக்கள் நாட்டுக்கு கேடு!

உரத்த சிந்தனை Featured
prasant kishore - 2026

-> கருத்து: செல்வநாயகம்


5 மாநில தேர்தல் ஃபிப்ரவரி 10 முதல்…

சில ஆண்டுகளாகவே, தேர்தல்களின் போது / தேர்தல் காலத்தில் கலவரங்கள், போராட்டங்கள், கொலைகள் என நிறைய நடந்தேறின. அவற்றோடு ஒப்பிடும் போது, இம்முறை தேர்தல் மிகவும் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

ஏன்???

தேச விரோத, இந்து விரோத கேப்மாரிகளை ஜெயிக்க வைத்த கன்சல்டண்ட் “பிரசாந்த் கிஷோர்” மிஸ்ஸிங். அதனால் தான்.

ஒரு புறம் விலை போன ஊடகங்களை கொண்டு போலி செய்திகளை கொண்டு ‘மோதி விரோத’ பரப்புரை & மறுபுறம், காங்கிரஸ் சூனியா , ஆம் ஆத்மி கேஜ்ரிவால், மமதா, பவார் போன்றவர்களை கொண்டு கலவரம் செய்வது பிகே ஃபார்முலா.

மோதி விரோதம் பேசினால் சிறுபான்மையினர் மனம் குளிர்ந்து வாக்களிப்பார்கள் என்பது இவர்கள் கண்டுபிடித்த சூத்திரம். இன்றும் விடியல் மோதி விரோதம் & இந்து விரோதம் பேசுவது, சிறுபான்மை வாக்காளர்களை குளிர்விப்பதற்காகவே.

இந்த synchronized / choreographed கலவரம் + மோதி விரோத ஊடக பரப்புரையால் என்ன பலன்? என்றால்… கலவரங்கள் மற்றும் அமைதி இன்மையால் பொதுவாக பாஜகவுக்கு வாக்களிக்காமல் போகிறார்கள் சிலர். (‘கலவரங்களை அடக்காதது பாஜக குற்றம். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’ என்று நினைப்பார்களோ, தெரியாது.)

தொடர்ந்து போலி செய்திகளை கொண்டு ‘மோதி விரோதத்தை’ ஊடகம் / சமூக வலைதளம் மூலம் விதைப்பதால், பாஜகவின் செல்வாக்கு, வாக்கு வங்கி பாதிப்படைகிறது.

பாஜக தரப்பில் இருந்து எவ்வளவு தான் உண்மைகளை அடிப்படையாக கொண்டு மறுப்புகள் வந்தாலும், அவை எடுபடுவதில்லை – ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன. (அந்த நிலை மாறி வருகிறது இன்று).

எடுத்துக்காட்டாக, சிஏஏ போராட்டத்தினால் டில்லி ஆட்சி – பாஜக பக்கம் வராமல் – ஆம் ஆத்மி பக்கம் போனது.

போலி விவசாய போராட்டத்தால் பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகளின் அளவு குறைந்தாலும், பாஜக வெற்றி பெற்றது பல மாநிலங்களில்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது… ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த தீயமுக, காங்கிரஸ் பின்னிருந்து இயக்கிய அந்த நாடகத்தால், பாஜகவின் வாக்கு வங்கி இரட்டை இலக்கங்களிலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு தமிழகத்தில் சரிந்தது. மக்களுக்கு , “ஜல்லிக்கட்டை நிறுத்திய தீயமுக – காங் போராடுகிறது? ஜல்லிக்கட்டை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்த பாஜக – மோதி மீது நமக்கு ஏன் விரோதம் எழுகிறது?” என்ற கேள்வி ஏன் எழுவதில்லை என்பது புரியாத புதிர்.

காற்றடிக்கும் திசையில் பலர் செல்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

போராட்டம், கலவரம், ஊடகங்கள் மூலம் மோதி விரோத பரப்புரை என்ற ஃபார்முலாவால் மக்களின் இயல்பு வாழ்வை பாதித்தனர் பிரஷாந்த் கிஷோரால் இயக்கப்பட்ட இந்த அரசியல்வாதிகள்.

பிரஷாந்த் கிஷோரால் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டவர்கள் உத்தவ் தாக்கரே, கேஜ்ரிவால், விடியல், மமதா…

இந்த தேர்தலில் எங்கே பிரஷாந்த் கிஷோர்???

1, ஐக்கிய ஜனதா தளத்தில் பிகே கை ஓங்கியதால் அங்கிருந்து துரத்தினார் நிதீஷ் குமார்.

2, “என்னை தலைவராக்குங்கள். மோதியை வீழ்த்துகிறேன்” என்று சூனியாவிடம் தன் திட்டத்தை முன்னிறுத்த, “காங்கிரஸ் எங்கள் குடும்ப சொத்து. உன்னை தலைவனாக்க மாட்டோம். ஓடிப் போ” என்று விரட்டிவிட்டார்கள்.

3, அங்கிருந்து வெளியேறிய பிகே, மோதியை வீழ்த்த, மமதா தலைமையில் காங்கிரஸ் இல்லா கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சித்து, அதுவும் தோல்வியில் முடிந்தது.

“மேற்கு வங்கத்தில் மமதாவை ஜெயிக்க வைத்தது நான் தான்” என்று பெருமையடித்து, திரிணாமூலை தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததால், அங்கிருந்தும் துரத்தப்பட்டிருக்கிறார் சென்ற மாதம்.

பிரதமர் ஆகும் ஆசையில் எல்லோரையும் பகைத்துக் கொண்ட பிகே இப்போது பதுங்கு குழியில் இருக்கிறார்!

என்றாலும், 5 மாநில தேர்தல்ககளின் – மார்ச் 10 முடிவுகள் வந்த – பின் மீண்டும் பிகே பாம்பு மீண்டும் தலை தூக்கும்.

விலைபோன ஊடகங்கள் முன் போல் பிகே-யை கவர் செய்வதில்லை இப்போது. தேர்தலுக்கு பிறகு தெரியும் இந்த பாம்பு என்ன செய்யும் என்பது.

இம்மாதிரி விஷ ஜந்துக்கள் நாட்டுக்கு கேடு.

1 thought on “இம்மாதிரி விஷ ஜந்துக்கள் நாட்டுக்கு கேடு!”

  1. Modi ji யும் ஒரு தேர்தல் ல இந்த விஷ ஜந்துவோட idea ல வெற்றி பெற்றார் னு நினைக்கிறேன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.