முன்னாள் உளவுத்துறை (RAW) அதிகாரியான ஆர்.எஸ்.என். சிங் மிகத் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். எந்தவிதமான தீவிரவாத நடவடிக்கையையும் அக்குவேறு, ஆணிவேராகப் பிரித்து ஆராய்ச்சி செய்கிறவர். அப்படியாகப்பட்ட அதிகாரியான அவர் பஞ்சாபில் பாரதப் பிரதமருக்கு எதிராக நடந்தது ஒரு படுகொலை முயற்சியே என்பதினை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார். துரதிருஷ்டவசமாக அது ஹிந்தியில் இருப்பதால் தமிழர்கள் புரிந்து கொள்வது கடினம்.
பல்வேறு உதாரணங்களை இந்தப் பேட்டியில் சொல்லும் ஆர்.எஸ்.என். சிங், முக்கியமாக ராஜிவ்காந்தியின் படுகொலையில் நிகழ்ந்த நிகழ்வுகளை இந்த படுகொலை முயற்சியில் ஒப்பிடுகிறார்.
முதலாவது, விடுதலைப் புலிகள் ராஜிவைக் கொல்வதற்கு முன்னர் அந்தத் திட்டத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தனர். அதாகப்பட்டது, ராஜிவ் ஸ்ரீபெரும்புதூருக்கு பேச வருவதற்கு முன்னால் வி.பி. சிங்கின் மீட்டிங் அதே இடத்தில் நடந்தது. அந்த மீட்டிங்கில் சிவராசனும், தணுவும் கலந்து கொண்டார்கள். தணு வி.பி. சிங்கிற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினாள். இது நடக்கக் கூடிய திட்டம்தான் என்பதனை விடுதலைப் புலிகள் உறுதி செய்து கொண்டனர். அதன்படியே ராஜிவைத் தீர்த்துக் கட்டினர்.
அதுபோலவே பஞ்சாபிலும் மழை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் பறந்து செல்வதற்குப் பதிலாக சாலை வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரை மடக்கிப் போடுவதற்காக பிரதமர் வருவதற்கு முந்தைய நாள் முழு ஒத்திகை நடந்திருக்கிறது. யார்யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் நன்றாகத் திட்டமிட்டு வைக்கப்பட்டது.
இரண்டு, ராஜிவ் ஸ்ரீபெரும்புதூரில் மேடையை நோக்கிப் போகையில் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஒருவர்கூட ராஜிவுடன் இருந்திருக்கவில்லை. கூடவே இருந்த ஜெயந்தி நடராஜன் கடைசி நிமிடத்தில் அங்கிருந்து நழுவிவிட்டார். பின்னர் கேட்கப்பட்டபோது “காரில் வைத்திருந்த தனது ஹேண்ட்பேக்கினை” எடுப்பதற்குச் சென்றுவிட்டதாகச் சொல்லித் தப்பித்தார் ஜெயந்தி.
அதுபோலவே பஞ்சாபிலும் முக்கியஸ்தர்களான முதலமைச்சர், மாநில டி.ஜி.பி. போன்றவர்கள் பிரதமரை வரவேற்க வரவில்லை. அதற்கும் மேலாக பிரதமரின் கான்வாயுடன் செல்லவேண்டிய பஞ்சாப் டி.ஜி.பி.யானவர் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட காரில் வராமல் காணமல் போய்விட்டார். பிரதமரின் பாதுகாப்பு முழுவதனையும் அந்த மாநில டி.ஜி.பி.யே செய்திருக்க வேண்டும். அப்படிக் செய்யாமல் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்.
பிரதமரின் கார் மேம்பாலத்தில் சிக்கியவுடன் கூட இருந்தவர்கள் பஞ்சாப் முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். ஆனால் அந்த ஆள் தொலைபேசியை எடுக்கவேயில்லை. அதுவேதான் பஞ்சாப் டி.ஜி.பி.யும் செய்தார்.
மூன்று, விடுதலைப் புலிகள் “குண்டு மாலையை ராஜீவுக்குப் போடப் போவதாக” உளவுத்துறையானது ப.சிதம்பரத்திடம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியோ அல்லது சிதம்பரமோ எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
அதுபோலவே, குறிப்பிட்ட இடத்தில் பிரதமரைத் தடுத்து நிறுத்தப் போகிறார்கள் என்பது மாநில உளவுத்துறைக்குத் தெரிந்திருந்தும் அதனை பிரதமரின் பாதுகாவலர்களுக்குச் சொல்லத (வேண்டுமென்றே) தவறினார்கள்.
பிரதமரின் கார் மேம்பாலத்தில் சிக்கியதும், முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் அவரை சுற்றுவதற்கு முயற்சிகள் நடந்தன. அதாகப்பட்டது அவர் அந்த இடத்திலிருந்து தப்பவே இயாலாதபடிக்கு சுற்றுப் போட முயற்சிகள் நடந்தன.
அந்த மேம்பாலம் பாகிஸ்தானிலிருந்து 20 கி.மி. தொலைவில் இருக்கிற ஒன்று. அதாகப்பட்டது பாகிஸ்தான் ராணுவத்தினரால் துல்லியமாகக் குறி வைக்கப்பட்ட ஒரு மேம்பாலம் அது. இந்தியாவுடன் போர் எதுவும் மூண்டால் பாகிஸ்தான் முதலில் பாலங்களை உடைக்கவே முயற்சி செய்யும். இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக எல்லைக்கு விரைவதனை அது தடுக்கும் என்பதால் பாகிஸ்தான் அந்த மேம்பாலத்தைக் குறித்தான் அத்தனை தகவல்களையும் முன் கூட்டியே கையில் வைத்திருக்கும் (அதையே இந்திய ராணுவமும் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை).
நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புவது, பாகிஸ்தானில் இருந்து சுடப்பட்ட பீரங்கி அல்லது மார்ட்டர் குண்டு மேம்பாலத்தில் நின்றிந்த பிரதமரின் கான்வாயை முற்றிலுமாகச் சிதறடித்திருக்கும்.
திட்டத்தின் முதல் பகுதி அது. ஆனால் என்ன காரணத்தாலோ அல்லது தயக்கத்தாலோ உடனடியாக அது நடக்கவில்லை.
பிரதமர் அந்தக் கூட்டத்துடன் கலந்து பேசி பின்னர் தொடர்ந்து பயணிக்க முயற்சித்திருந்தாலும் ஆபத்துதான். அந்தக் கூட்டத்திற்குள் மனித வெடிகுண்டு இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது (சமிபத்தில் ஐந்து கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பஞ்சாபின் அந்தப் பகுதியில் பிடிபட்டிருக்கிறது).
ஆனால் யார் செய்த புண்ணியமோ, பிரதமர் உடனடியாக அந்த இடத்திலிருந்து திரும்ப முடிவு செய்து பின்னர் அங்கிருந்து திரும்பிவிட்டார். அவர் இன்னும் ஒண்றிரண்டு நிமிடங்கள் அங்கு தாமதித்திருந்தாலும் எது வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
பிரதமர் கொல்லப்பட்டிருந்தால் இந்தியா பொங்கியெழும், ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் பாகிஸ்தான் ஒரு பொறுக்கி தேசம். அது இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் மோடி என்கிற மாமனிதனின் இழப்பு இந்தியாவுக்குப் பேரிடியாக இருந்திருக்கும். நாடு ஒரு குழப்பமான சூழ்நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும். அதுதான் அண்டோனியோ மொய்னோ, ராவுல் வின்ஸி போன்றவர்களுக்குத் தேவை. அவர்கள் மோடியின் தலைமையில் ஹிந்து மறுமலர்ச்சி ஏற்படுவதனை அறவே வெறுக்கிறார்கள். இந்தியாவை ஒரு கிறிஸ்த நாடாக்க வேண்டும் என்கிறா மொய்னோவின் கனவினை மோடி தடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே அவள் அதற்காக எதுவேண்டுமானாலும் செய்வாள்.
அதனைத் தொடர்ந்து மோடி தமிழகத்திற்கு வராமல் தவிர்த்தார். அது மிக முக்கியமான முடிவு. ஏனென்றால் பஞ்சாபைப் போலவே தமிழகத்திலும் கிறிஸ்தவர்களே ஆள்கிறார்கள். அய்யாத்துரையும் அவரது கோமாளிகளும் பெயரளவுக்கு அமைச்சர்களாக வலம் வந்தாலும் அடிப்படையில் எல்லா அதிகாரமும் கிறிஸ்தவர்களிடமே இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் இன்றைக்குத் தமிழகத்தில் சட்டம் என்கிற நிலைமை இருக்கிறது. எனவே அவர்கள் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக என்ன திட்டங்கள் வைத்திருந்தார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். கிறிஸ்தவ மதவெறி அத்தனை ஆபத்து மிக்கது.
ஹிந்தி புரிந்தவர்கள் இந்தப் பேட்டியைத் தவறாது காண்பீராக.
- பி.எஸ்.நரேந்திரன் (~Narenthiran PS)