
கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஏற்காமல் கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு!
இதில் 9 பெயர்கள் ஏற்கனவே மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டவை. இருந்தாலும் மீண்டும் அனுப்பியிருக்கிறது கொலீஜியம். மீண்டும் நிராகரிப்பு.
நீதிபதிகள், “நானே ராஜா நானே மந்திரி” என்ற முறையில் நீதிபதிகளை நியமிப்பது உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான். “அரசாங்கத்தை நீதிபதிகள் நியமனத்தில் தலையிட விட மாட்டோம்” என்று அடம் பிடிக்கிறார்கள்.
எனவே….. அவர்களாகவே பெயர்களை – “உறவினர், நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை” – என புகார் இருந்தும் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்புகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தை இண்டலிஜென்ஸ் ப்யூரோ உள்ளிட்டவற்றைக் கொண்டு அரசு ஆராய்கிறது. ஐ.பி அறிக்கையில் குறைபாடுகள் இருந்தால் நிராகரிக்கிறது அரசு.
ஐ.பி அறிக்கையை கொலீஜியத்திடம் பகிர்வதில்லை அரசு – அவர்களுக்கு அது தேவையில்லை என்பதால்.
கொலீஜியமும் “எப்படி குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்தோம்?” என்ற பிரம்ம சூத்திரத்தை யாருக்கும் பகிர்வதில்லை.
கொலீஜியத்தின் ‘நமக்கு நாமே’ முரண்டால், அரசு – கொலீஜியம் செயல்பாடுகள் இரு தீவுகளாக (island) இருக்கின்றன.
இதில் நம் கேள்வி: ஐ.பி அறிக்கை ஒருவரை ‘சரியில்லை’ என்று குறிப்பிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அவர் மேலும் அதே பஞ்சாயத்து பணியில் தொடர்வது நீதிக்கு இழுக்கில்லையா? குறிப்பிட்ட நபர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இம்பீச்மெண்ட் / தகுதிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அது கடினம். ஆனால், கொலீஜியம் நடவடிக்கை எடுக்கலாம். எடுப்பதில்லை. இந்த ஓட்டைகளால் நமக்கு நீதி கிடைப்பதில் பல இடர்பாடுகள்…!
பூனைக்கு மணியை கட்டுங்க மோடி ஜி. உங்களை விட்டால் எங்களுக்கு கதி இல்லை!
- மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வர வேண்டும் ‘அவர்களுக்கு’. அவர்கள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டவர்களில்லை!