திராவிடம் வளர்த்த ‘சுயமரியாதை’!

erode election - 2026

ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் கடத்தப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள். கையைப் பிடித்து யாராவது இழுத்தார்களா? இல்லவே இல்லை. ஓசி சோறு, பணம், பொருட்கள் இதற்காக மக்களாக தாங்களாக விரும்பி சென்று அந்த இடங்களில் அடைபட்டுக் கொள்கிறார்கள்.

பணம், பேராசை இது எல்லாமே பெரும்பான்மை மக்கள் மனதில் மிக ஆழமாக ஊன்றியுள்ளது. நாடு, நாட்டு மக்கள் எல்லாம் நாசமாக போனாலும் போகட்டும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த 500 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்ற அளவுக்கு பிச்சைக்காரர்களாக மக்கள் ஆகிவிட்டார்கள். தங்களுடைய கணவர்கள் கொல்லப்பட்டாலும் சரி, குடிக்கு அடிமையாகி இறந்தாலும் சரி, குடும்பமே அழிந்தாலும் சரி. பணம் மட்டும் கொடுத்தால் போதும், எதையும் செய்யக் கூடியவர்களாக மக்கள் குரூர மனம் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.

எந்த இழப்பும் மிகவும் சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. உயிர் பலி என்பது ஒன்றுமே இல்லை. தனிப்பட்ட முறையில் இழப்பு ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, யார் இறந்தாலும் பரவாயில்லை, எந்தவிதமான கவலையும் இல்லை கணவன் தந்தை மனைவி மக்கள் என்று யார் இறந்தாலும் பரவாயில்லை, பணம் மட்டும் கொடுங்கள் போதும் என்ற அளவுக்கு பேராசை பிடித்தவர்களாக பணவெறி பிடித்தவர்களாக மக்கள் மாறிவிட்டார்கள்.

erode eletion - 2026

இவர்கள் ஒன்றும் உணவுக்கே வழியில்லாத ஏழைகள் அல்ல. இதற்கு நிச்சயம் திமுக காரணம் அல்ல. நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து மக்களை வேறு எங்கோ இட்டுச் சென்ற இறை மறுப்பு, நாத்திக சிந்தனை, பேராசை இவைதான் காரணம். மக்கள் மனதில் தர்ம சிந்தனை ஞாயம் நேர்மை எல்லாம் அர்த்தமற்ற சொற்களாக மாறிவிட்டன.

டாஸ்மாக்கில் இலக்கு வைத்தார்கள் என்கிறார்கள். வீட்டுக்குள் புகுந்து யாராவது பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் டாஸ்மாக்கில் கொடுத்து பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்த கையில் திணித்தார்களா? இல்லையே. நான் வரமாட்டேன் உங்கள் பிரியாணி பந்தலுக்கு என்று சொன்னால் யாராவது கோவிக்கப் போகிறார்களா? இல்லையே! பின் என்னதான் பிரச்சனை?

நேர்மையாக இருக்க வேண்டியது, நியாயமாக இருக்க வேண்டியது எல்லாமே அறிவற்ற செயல்கள் என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. பணம் பணம் பணம் மட்டுமே எல்லாமே என்ற சிந்தனை தான் மேலோங்கி இருக்கிறது.

கல்வி, விழிப்புணர்வு என்று எதைக் கொடுத்தாலும் சரி, இவர்கள் திருந்தவே போவதில்லை. இவர்களிடமிருந்து ஓட்டுரிமையை பிடுங்கி எடுப்பது மட்டுமே தீர்வாக அமையும்.

கருத்து: ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories