spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவளம் மிகுந்த எதிர்காலத்தைக் காட்டும் குலசேகரன் பட்டினம்!

வளம் மிகுந்த எதிர்காலத்தைக் காட்டும் குலசேகரன் பட்டினம்!

- Advertisement -
  • ‘ஜய்ஹிந்த்’ ஸ்ரீராம்

சென்னைப் பட்டினத்தில் இருந்து குலசேகரன் பட்டினம் வரை…

நேற்றைய தினம் நம் பாரதப் பிரதமர் இஸ்ரோவின் மற்றொரு ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் வேளையில்…… அங்கே இருந்து தான் சீனாவின் ராக்கெட்டையே நம் இந்திய தேசம் தான் ஏவ இருப்பதாக ஓர் தொலைநோக்கு பார்வையை ஆளும் திராவிடம் தனது சிந்தனா சக்தியை வெளிப்படுத்தியது.

அட இதென்ன பிரமாதம்…… எதிர் காலத்தில் மட்டுமல்ல…, கடந்த கால சம்பவத்திலும் மாற்றம் செய்து காண்பிப்போம் என்கிற ரீதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தன் தகப்பன் தான் இதற்கான முன் முயற்சி எடுத்தார் என எடுத்துச் சொல்லி தன் பிரதாபங்களை எல்லாம் வெளிப் படுத்தி இருந்தார்.

ஓர் விஷயத்தை சுலபமாக இவர்கள் மறந்து விட்டார்கள்….. வரலாற்று பக்கங்களில் அவை இன்னமும் ஆழமாக பொதிந்து கிடக்கிறது ….

முதன் முதலில் இந்தியாவிற்கான செயற்கை கோள் ஏவுதளத்தை கண்டறிய அன்றைய இந்திய விண்வெளி ஆய்வு திட்டங்களின் தலைவர் திரு விக்ரம் சாராபாய் தலைமையில், அவரது வழி காட்டுதலின்படி அவரது சக நன்பரும்… ஆகச் சிறந்த புவியியல் வல்லுநரான சிட்னிஸிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. நன்கு கவனியுங்கள்….இது நடந்தது 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்…… கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலத்தில் என்பதாக புரிந்து கொள்ளுங்கள்…..

சிட்னிஸ் அதாவது ஏக்நாத் வசந்த் சிட்னிஸ், கிழக்கு கடற்கரை முழுவதும் அலைகிறார்…. அவரது முதல் தேர்வே இன்றைய அதே குலசேகர பட்டிணம் தான். இதற்கு அவருக்கு இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன…. ஒன்று மகேந்தர கிரி மற்றும் இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவதளம் அமைந்துள்ள திருவனந்தபுரம் அருகே வருகிறது. இரண்டாவது குலசேகர பட்டினத்தின் நில அமைப்பு. ஒப்படர்த்தி அதிகமாக உள்ள பாறைகள் சூழ் மண் பரப்பு. இவை எல்லாவற்றையும் விட பூமி மத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் என்பதாலும் தான்……

ஆனால் நடந்தது வேறு.

இந்த இடத்தை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு மூன்று முறை கடிதப் போக்குவரத்து நடந்து, துறை ரீதியான அமைச்சரை பார்க்க வந்த போதும் அதன் பின்னரான காலகட்டத்திலும் கூட….. முறையான ஒத்துழைப்பு இல்லை….. அதனை அவர்கள் என்னவென்று புரிந்து கொள்ள கூட ஆளில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றே பதிவுகள் சொல்கிறது.இதன் பிறகே திருப்பதி மாவட்டத்தில் வரும் சூலூர்பேட்டைக்கு அருகில் உள்ள இன்றைய ஸ்ரீஹரிக்கோட்டா தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்கு இருந்து நம் எஸ் எல் வி ரோகிணி தான் முதலில் புறப்பட்டது.

சரியாக இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் குலசேகர பட்டினத்தின் நில அமைப்பின் சாதகங்களை உணர்ந்து மீண்டும் ஒரு முறை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர ……… இந்த முறை முழு தீர்த்தத்தில் இருந்த அமைச்சர் பெருமான் தனக்கு எவ்வளவு கிடைக்கும் இதில்..என நேரிடையாகவே கேட்டு அதிரடத்திருக்கிறார். அதாகப்பட்டது திராவிடம் நன்றாக வேரூன்றி தவறுகளை கூட விகல்பம் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தலை தலையாய் அடித்துக் கொண்டு சென்றவர்கள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்திராயன் -1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறார்கள். காலக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.இதோ சந்திராயன் -3 அதே ஏவுதளத்தில் இருந்து ஏவ நாள் பார்த்து வருகிறார்கள்.

நம் இந்தியர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டம் தான் ககண்யான். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு…. இதில் இடம் பெறும் வீரர்கள் வரை தேர்வு செய்து இருக்கிறார்கள். இவர்களை தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் நமது பிரதமர் இந்த வருகையின் போது…. ககண்யான் திட்டத்தின் பெரும் நோக்கம், இவர்களோடு முதலில் சந்திரனுக்கு மேலாக பறப்பது…… பிறகு நிலவில் தரையிரங்குவது., என இரண்டு கட்டமாக இதனை செயல்படுத்த இருக்கிறார்கள். இதனோடு கூடவே விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்துவதும்…..அதனை முழுக்க முழுக்க நம்மவர்களைக்கொண்டே உருவாக்குவதும் என்பதையே பிரதானமாக கொண்டு இருக்கிறார்கள். இதனை அனைத்தும் இங்கு குலசேகர பட்டினத்தின் அமையவுள்ள ஏவுதளத்தில் இருந்தே செயல்படுத்த இருக்கிறார்கள்.

பூர்வாங்க பணியில் 30% நம்மவர்கள் முடித்து விட்டு இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இதில் இவர்கள் எங்கே வந்தார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.நேற்றைய தினமே நமது ரோகிணியை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கிறார்கள்.

இவர்களால் உக்ரைனில் இருந்து எல்லாம் பயணிகளை மீட்டெடுத்து வர முடியுமே தவிர இங்கு உள்ள ஊரப்பாக்கத்தில் ஒரு பேருந்து முணையத்தை கூட முறையாக இயக்க தெரியாது. நூற்றாண்டு கொண்டாடுபவரின் பெயரை வைத்து விட்டு வெறும் நூறு நாட்களுக்கு கூட அந்த பெயரில் அழைக்க…. அடையாளப் படுத்த தயங்கும் சூரர்களை கண்டவர்கள் தான் இவர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும்.

நம் விஷயத்திற்கு வருவோம்…..

ஏற்கனவே உலக அளவில் புகழ் பெற்ற முதல் தரமான ஏவுதளம் எனப் பெயர் பெற்றது அமெரிக்க கென்னடி விண்வெளி ஏவுதளம் தான். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது நம் இந்திய இஸ்ரோவிற்கு சொந்தமான ஸ்ரீஹரிக்கோட்டா. அப்படி இருக்க எதற்காக மற்றோர் ஏவுதளம்…..?

அதற்கு காரணம் உண்டு.

தற்சமயம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவுப்படும் போது புவி வட்ட பாதையை அடைய நாம் இலங்கையை தவிர்க்க வேண்டி கிழக்கில் ஏவி பிறகு அதன் பாதை மாற்ற வேண்டி வருகிறது. குலசேகர பட்டிணத்தில் இருந்து அப்படி அல்ல…… நேரிடையாக நம்மால் விண்ணில் ஏவ முடியும். அடுத்ததாக அதி சக்தி வாய்ந்த ஏவலின் போது பூமி அதிக அளவில் அதிர்வு கொள்ளும்.இதனை தாங்கும் அளவுக்கு அந்த நிலப்பரப்பு இருத்தல் அவசியம்…… அது நமது குலசேகர பட்டிணத்தில் இருக்கிறது. தவிர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நில அமைப்பை அந்த இடம் கொண்டுள்ளதால் நம்மால் சுலபமாக பல பாதுகாப்பு தொழில்நுட்ப விஷயங்களை சாதிக்க முடியும் என்கிறார்கள்.

மிக முக்கியமாக சீனாவின் கொட்டத்தை இந்த பிராந்தியத்திலேயே இல்லாத வகையில் பாதுகாப்பு முறைமைகள் கையாள முடியும் என்கிறார்கள்.

இலங்கையை தொட்டு மாலத்தீவு வரை தனது அக்டோபஸ் கரங்களால் விழுங்க காத்திருக்கும் ஒரு தேசத்திற்கு…… இங்கு உள்ள சில கூமுட்டைகள் கூடிகுலாவி ….. தன் சுயநலத்திற்காக இங்குள்ள நம்மை அடகு வைக்க சமயம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள்….. அதன் வெளிப்பாடே நேற்றைய விளம்பரம். இந்த லட்சணத்தில் இவர்களுக்கு வாய் காது வரை நீள்கிறது. இவர்களுக்கு எல்லாம் அம்மையார் பாணி அரசியல் தான் சரி….. அவராக இருந்திருந்தால் விழா தொடங்குவதற்கு முன்பாக தேசத் துரோக வழக்கு பாய்ந்து கம்பி எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்கள் இவர்கள். எம்பி, எம் எல் ஏ பதவி வரை நீதிமன்றத்தால் கேள்விக்கு உள்ளாகி இருக்கும். அவர்களிடம் போய் கண்ணே… கனியே… என்றால் ஆகுமா????

அழிச்சாட்டியம் செய்யத்தான் செய்வார்கள்.

ஜெய் ஹிந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe