
ஆபரேஷன் சிந்தூர்’ – சமூக ஊடகங்களில் பொறுப்புள்ள போக்கு அவசியம்!
நாம் சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் ஆகியவற்றை எவ்வித தயக்கமும் இன்றி புகழும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதும் நல்லதே.! ஆனால் மிகவும் முக்கியமானது — நாம் பகிரும் வார்த்தைகள் பொறுப்புடன் இருக்க வேண்டியது.
உதாரணத்திற்கு, “இப்போது லாகூரை கைப்பற்றுங்கள்”, “அடுத்து இஸ்லாமாபாத்”, “மோடி இப்போது PoK-ஐ இணைக்க வேண்டும்” போன்ற பதிவுகள் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை.
எல்லோருடைய பதிவுகளையும் ஆராய்ந்து பார்த்து அரசு நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை என்பதையும் நாம் நன்கறிந்திருக்கிறோம் — இதைத் தாண்டிய திட்டங்கள் மத்திய அரசுக்கு உள்ளன. ஆனால் அர்த்தமற்ற இந்த வகைச் செய்திகள் பாகிஸ்தான் சைபர் படை மற்றும் அவர்களது வழக்கமான சமூக ஊடக பிரச்சார வட்டத்தில் இருந்து எடுத்து கையாளப்படுகின்றன.
இந்தியாவில் கூட சிலர் பாகிஸ்தானின் கருத்து உருவாக்கத்திற்காக இவற்றை பயன்படுத்துகிறார்கள். பின்னர் “இந்தியா தேர்தல் இலாபத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்துகிறது” என்ற தவறான கண்ணோட்டத்தை (புரோபகண்டா) பாகிஸ்தான் உருவாக்குகிறது.
மேலும், போர் சூழ்நிலையில் பாகிஸ்தான் பொது மக்களுக்கு சேதம் ஏற்பட்டால் / இறக்க நேரிட்டால், (அதுவே ‘Collateral Damage’ என அழைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று.) அந்த சமயத்தில், “சந்தோஷம்”, “இன்னும் வேணும்”, “72” போன்ற கருத்துகள் அல்லது நகைச்சுவை மீம்ஸ்களை போடாதீர்கள்.
இவை அனைத்தும் இந்தியாவின் நேர்மையான நோக்கங்களை பாகிஸ்தானால் எதிர்மறையாக கையாளும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, வீரர்களை பாராட்டுங்கள். பகைவரின் சதியை வெளிக்காட்டுங்கள். பொறுப்புடன், சீரான முறையில் செயல்பட்டு, நாட்டின் நற்பெயரை காப்போம்…
குறிப்பு: இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.
பதிவு: – ஜி.எஸ்.பாலமுருகன்.





