
- அருண்பிரபு ஹரிஹரன்
இந்த அமெரிக்க வியாபாரப் பிரதிநிதி Howard Lutnickம் அவரது இந்திய வம்சாவளி அடிமை Asha Motwaniம் பினாத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
- எங்களை மீறி ரஷ்யாவோடு உறவு என்பதை நிறுத்துங்கள்.
- BRICSலிருந்து வெளியே வாருங்கள்.
- டாலரை ஏறக்கட்டும் ஆட்களோடு டூ விடுங்கள்.
- சொல்பேச்சுக் கேட்கும் ஒரு ஆளை வியாபாரப் பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்.
ஏன் இப்படி?
ரஷ்ய உறவை சிக்கலான உக்ரைன் போரின் உச்சகட்டத்திலேயே முறிக்கவில்லை. இப்போதெல்லாம் முடியாது.
BRICSலிருந்தெல்லாம் வெளிவர முடியாது. ஆரம்பித்த குரூப்பே நாங்க தான்.
டாலர் தன்னாலே புழக்கத்திலிருந்து குறைந்து காணாமல் போகும். நாங்கள் ஏன் மெனக்கெட வேண்டும்.
பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல் பேச்சு இவர்களுக்குப் புதிது. மன்மோகன் காலம் போல “இந்தா பழைய மருந்து மாத்திரை கத்தி கம்பெல்லாம் இருக்கு எடுத்துக்க… இதொரு 50000 அதொரு 50000னு கோடில குடுத்திரு” என்று சொல்ல, சரிங்க எசமான் என்று குனிந்து கும்பிட்டு வரும் ஆளை எதிர்பாரத்திருக்கிறார்கள்.
ஆனால் 10% பேஸ் டாரிஃபை ஏற்கமுடியாது (அதாவது என்ன Free Trade Agreements (FTA) உடன்பாடு எட்டினாலும் 10% அடிப்படை வரி உண்டு என்கிறது அமெரிக்கா) என்று ஆரம்பித்துள்ளர் கோயலார். பிரிட்டிஷ்காரன் ஏத்துக்கிட்டனேய்யா? என்று அமெரிக்கர்கள் பேச அது அவங்க விவகாரம், நமக்கு இந்த 10% தோதுபடாதுங்க என்று சொல்லிவிட்டார். இது தவிர உற்பத்தியாகும் இடம் பற்றிய விதிகளில் (Rule of Origin) இந்தியத் தயாரிப்புகள் (Made in India) 60% உள்ளூர் பொருட்கள், ஆட்களை வைத்துத் தயாரிக்கவேண்டும் என்பதை 35% குறைக்கச் சொல்கிறார் கோயல்.
இது தவிர ட்ரம்ப் விதிக்கும் வரிகளை எதிர்த்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதிக்குத் தோன்றியபடி எல்லாம் வரிவிதிக்க அதிகாரமில்லை என்கிறது. வழக்கின் முடிவு ட்ரம்ப் இஷ்டத்துக்கு வரி விதிக்கக் கூடாது என்பதாகவே இருக்கும் என்று கணித்த நம் சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்படி இல்லை என்றாகப் போகிற வரியை ஏன் மதித்துப் பேசவேண்டும் என்று போகிறார்.
இது தவிர சீனாவுக்கு 245% வரி ஐரோப்பாவுக்கு 200% வரி, என்று மிரட்டிய ட்ரம்ப் இப்போது தேர்த்ல்ல எல்லாம் ஜெயிச்சு ஜனாதிபதி ஆயிருக்கேன்யா, ஒரு 60% இல்லாட்டி 30% ஆவது போட்டுக்குடுங்கய்யா என்கிறார். இப்படி ஆடும் ஆளிடம் கெஞ்சவேண்டாம். கொஞ்சம் முறைக்கினால் தன்னாலே இறங்குவார் என்று கோயல் பிரித்து மேய்கிறார்.
மேலும் கடந்த மார்ச்சில் இந்திய எஃகு, அலுமினியம் இவற்றுக்கு 25% வரி போட்டார் ட்ரம்ப். இது WTO விதிமீறல் என்று பிராது கொடுத்தது நம் அரசு. WTF என்று பிராதை குப்பையில் போடச் சொன்னார் ட்ரம்ப். பாதாம் பருப்பு, பாதாங்கொட்டை, உலோகம் உள்ளிட்டவற்றுக்கு 25% வரி போடுவோம் என்று சொல்லிவிட்டது நம் அரசு.
இது தவிர இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேனாக்கும் என்றும் வியாபாரம் செய்யமாட்டேன் என்று மிரட்டியதில் இரு பக்கமும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டார்கள் என்றும் ட்ரம்ப் பேசித்திரிவது மோடிக்குப் பிடிக்கவில்லை. இந்த வியாபாரப் பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் வெற்றி கொண்டாட இடம் தரக்கூடாது என்று அடித்தாடுகிறார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே நம்மிடம் வியாபாரம் பேசுவது சரியில்லை என்றால் அவர்கள் சிறப்பானவர்கள். பாகிஸ்தான் ஆட்கள் நல்ல வியாபாரிகள் என்கிறார் ட்ரம்ப். சீன ஆயுதத்தை விட்டு அமெரிக்க ஆயுதம் வாங்குவதைத்தான் இப்படிச் சொல்கிறார். ஐஎமெஃப் கடனில் பாதுகாப்புக்கு என்று பணம் ஒதுக்கி அமெரிக்க ஆயுதம் வாங்கி செழிக்க வைக்கும் பாகிஸ்தான என்று பேசுகிறார் ட்ரம்ப்.
இது தவிர ட்ரம்ப் TACO என்று அமெரிக்காவில் பலரும் பேசுகின்றனர். Trump Always Chickens Out என்பதன் சுருக்கமே TACO. முதலீட்டாளர்கள் பலர் ட்ரம்ப் வரி ஏற்றியவுடன் சரியும் மங்குகளை வாங்கி வரி குறைத்தவுடன் ஏற்றத்தில் பங்குகளை விற்று லாபம் பார்ககின்றனர். அதறகு TACO Trade என்று பெயர் வைத்துக் கிண்டலடிக்கிறார்கள் அமெரிக்கர்கள். இந்த TACO Tradeக்கு எப்போது எவ்வளவு வரி என்று குதிப்பார் ட்ரம்ப் என்று தெரியவில்லை.
ட்ரம்ப் வரிவிதித்த ஏப்ரல் மாதத்தில் “வாய்யா பேசுவோம்” என்றார் மோடி. அப்போது மோடி பணிந்துவிட்டார் என்று கூவியவர்கள் இப்போது India has toughened trade stand என்று அமெரிக்கர்கள் புலம்புவதற்கு என்ன சொல்வார்கள்?
மோடி என்னை விட மிகச் சிறந்த வகையில் பேரம் பேசுபவர் (US President Trump acknowledged PM Modi as a tougher negotiator)- என்று அன்று அமெரிக்காவில் வைத்து டிரம்ப் சொன்னதை பிரதமர் மோடி இன்று மெய்யாக்கியிருக்கிறார்.





