
பூனைக் குட்டி வெளியே வந்தது.
கெடு நாளுக்கு ((9ஆம் தேதி)) ஒரு நாள் முன்பே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 25% வரிவிதிப்பிற்கு இடைக்கால தடை அறிவித்து அதனை ஆகஸ்டு முதல் நாள் வரை நீடித்து உத்தரவிட்டார்.
கூடுதலாக இம்முறை இந்த கெடு தேதியை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படாது என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சிரிப்பாய் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு. கோமாளி போல் ட்ரம்பை மாற்றி வைத்து பகடி செய்து கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும் அவர் அசரவில்லை
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் மூலம் கெடு நாள் நீடிப்பு அறிவித்ததோடு கிட்டத்தட்ட பத்தொன்பது நாடுகளுக்கு தனித் தனியே கடிதமும் எழுதி இருப்பதாக சொல்கிறார்கள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை…….
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் போன் மேல் போன் கால்கள் செய்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் மன்றாடி கெஞ்சி கேட்டு கொண்டு வருகிறார்கள் என செய்தி தொடர்பாளர் பொது வெளியில் செய்தி அறிக்கை வாசிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஏனெனில் இது என்ன மாதிரியான வெளியுறவு கொள்கை மற்றும் ராஜாங்க நடவடிக்கை என சீற ஆரம்பித்து இருக்கிறார்கள் உலகின் பல நாடுகளில்…. கெஞ்சி கேட்கும் அளவிற்கு அவசியம் என்ன வந்தது எங்களுக்கு…. என வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.
அப்படியே அமெரிக்கா சொல்வது நிஜம் என்றால் எதற்காக கடிதம் எழுதி கேட்ட வேண்டும்…….. நாங்கள் கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்கும் போது…?என கேள்வி கேட்டு அதிரடித்து வருகிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக நீடிக்க லாயிக்கற்றவர். அவரால்….. அவரது நிர்வாக திறமை இன்மையால் பங்கு வர்த்தகத்தில் மூன்று ட்ரில்லியன் டாலர்களை இழக்க நேரிட்டுள்ளது. போதாகுறைக்கு 21 அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இதுவே பொது ஊரடங்கு போல் காத்தாடி வருகிறது. கனடாவிலோ அமெரிக்க பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதில்லை ….. மீறினால் அந்த வணிக நிறுவனத்தை கனேடிய பிரஜைகள் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
கனடாவில் இருந்து சரக்கு போக்குவரத்து விமானங்கள் கூட வருவதில்லை… இதே நிலை தான் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் விமானச் சேவைகள் வெகுவாக குறைந்து வருகிறது என சுட்டி காட்டி வருகிறார்கள்.
செப்டம்பர் வரையிலான காலத்திற்கான பிஸினஸ் கிளாஸ் முன்பதிவுகள் பெருமளவு கான்சல் செய்து இருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்.
இதை ட்ரம்ப்….. சமீபத்திய நாட்களில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள் என பகடி செய்து கொண்டு நிற்கிறார் அவர்.
காலக் கெடு நீடிப்பு அறிவித்ததோடு சில பல நாடுகளுக்கு உண்டான வரி விகிதங்களில் சம்மந்தா சம்மந்தமில்லாத மாற்றமும் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா, தைவானில் இவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே இவர் பதவிக்கு வந்த சமயத்தில்….. கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்… லாஸ் வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை எந்த ஒரு நிதியுதவியோ அல்லது இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையோ கொடுக்கவில்லை என்கிற ரீதியிலான புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டிடும் போல் உள்ள இந்த சூழ்நிலையில் சரியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை என பலரும் பொரும ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நம் இந்திய தேசம் கடந்த வாரத்திலேயே…. கெடு நாளுக்காக ஏதும் செய்வதாகயில்லை. இந்திய நலனே பிரதானம் என பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த வகையில் பார்த்தால்… டொனால்ட் ட்ரம்ப் இறங்கி வந்து இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்து இருக்கிறார் என்பதாக இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்கா இந்தியா இடையேயான இடைக்கால வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் போல் தெரிகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….. ஓவல் அலுவலக செய்தி குறிப்பும் அதையே ஊர்ஜிதம் செய்து இருக்கிறது. இந்தியா, பெரிய அளவில் இறங்கி வரும் வாய்ப்பு இனி இல்லை என்கிறார்கள் அவர்கள்.
டொனால்ட் ட்ரம்ப் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருக்கும் அவரது பிக் ப்யூட்டிபுல் பில்லில் ஏகப்பட்ட வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.
பிறகு ஏன் இத்தனை அலப்பறை என கேள்வி கேட்டால் ஒருத்தரும் வாயே திறக்கவில்லை.
ஆக செம்மத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டு ட்ரம்ப் வெளிப்பார்வைக்கு வீர வசனம் பேசுகிறார் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆக பிரிக்ஸ், அமெரிக்காவின் அடி மடியிலேயே கைவைத்து அசைத்து பார்த்து இருக்கிறது. இனி ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுக்க வேண்டியது தான் பாக்கி. நம்மவர் சத்தமில்லாமல் சாதித்து காட்டி இருக்கிறார். அதற்கு இந்த கெடு நாள் நீடிப்பே கண் கண்ட சாட்சி.
வரும் நாட்களில்…. அதாவது இந்த இருபது நாட்களில் இடைக்கால வர்த்தக உடன்படிக்கை பற்றி செய்தி வரும். பின்னர் அது நம் இந்திய தேசத்திற்கு மட்டும் நிரந்தரமாக இருக்கும் போலிருக்கிறது. அமெரிக்க நிர்வாக குளறுபடிகளால் அதன் நட்பு வட்டத்தில் உள்ள நாடுகளே ட்ரம்ப்பை சாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆக…. கொஞ்சம் கொஞ்சமாக நம் இந்திய தேசத்தின் செல்வாக்கு சர்வதேச அளவில் ஓங்க ஆரம்பித்து விட்டது என இதனை புரிந்து கொள்ளலாம்.
வாழ்க பாரதம். வெல்லட்டும் எட்டு திக்கும், ஓங்கட்டும் அதன் புகழ்.
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்





