இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்… என்ன நடக்குது இங்கே!

NIA arrested seven foriegn nationals in mizoram - 2026

அமெரிக்க சி ஐ ஏ ஏஜென்ட் இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் சிக்கியுள்ளான். கூட ஐந்தாறு உக்ரைன்காரர்கள் வேறு. அமெரிக்க நாட்டின் கெடுதலை நினைப்பவர்கள் பாரதத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் உலக நலனை விரும்புகிறவர்கள் அமெரிக்காவில் ஒருவர் கூட இல்லை.

நாம் நன்றாக இருக்கவேண்டுமென்றால் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதோடு அடுத்தவன் நன்றாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் உயிரோடு இருக்கவேண்டும், நாம் போடும் பிச்சைக்கு ஏங்க வேண்டும், நம்மையே முதலாளியாக எண்ணவேண்டும், நிரந்தர தாழ்வு மனப்பான்மையோடு நம்மை கடவுளுக்கு இணையாக பார்க்கவேண்டும். இந்த எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து வைத்துள்ளது அமேரிக்கா அவர்களது மக்கள் மனதில்.

இந்தியா தங்களுக்கு உதவவில்லை, போரையும் நிறுத்தவில்லை என்பதற்காக கூலிப்படைகளை அனுப்பியுள்ளது இரு நாடுகளும். இந்த இரண்டு நாடுகளிலும், பாரத நாட்டில் இருப்பது போல தங்கள் நாட்டை நேசிக்கும் தேசபக்தர்கள் எல்லாம் கிடையாது. தங்கள் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய சுகத்தை நாடு உத்தேசிப்பதால், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் கூட்டம் தங்களுக்கு பணம் தருகிறது என்பதால் நாட்டுக்காக வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான்.

சிவப்பு பயங்கரவாதத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்துவிட்டதால், மீறி வந்தால் பாரதம் உள்ளே வந்து தாக்கும் என்பதால் உள்ளே வராமல் இருக்கும் இடத்திலிருந்தே தாக்கும் டிரோன்களுக்கான பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உக்ரைன் டிரோன் விஷயத்தில் ரஷியா கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது. அதனால் இந்த பகுதியில் கிருஸ்தவ நாடு உருவாக்குவதை விட, கிறிஸ்தவம் என்ற பெயரில் சிகப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுதான் திட்டம். அங்குள்ள லூஷாய், ஹுமார், லாய், ரால்ட், மற்றும் சகமா இனங்களை தூண்டி விட்டு, போதை பொருளை ஊக்குவிப்பதே நோக்கம்.

ஏற்கனவே பாகிஸ்தானில் விளைந்துள்ள போதைப்பொருட்களை அரபிக்கடல் வழியாக கடத்த முடியவில்லை. கவனித்து பார்த்தீர்களென்றால் சமீப காலமாக கடலில் பெருமளவில் பொருள் எதுவும் சிக்கவில்லை. காரணம், இந்திய இராணுவம். மாட்டினால் தொலைந்தோம் என்று வரவில்லை. அதனால் சீனா வழியாக மியான்மார் வழியாக மிசோரம் பகுதியில் கால் பாதிக்க திட்டம்.

கில்கிட் பகுதியை பாகிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் வந்த வினை. அப்படியே நடந்து போகிறார்கள் திபெத், சீனா என்று. ஆனால் பலூச் புரட்சியாளர்கள் அடித்து நிமிர்த்துவதால், ஆப்கனிஸ்தான் இன்னொரு பக்கம் துளைத்து எடுப்பதால் நேரடியாக பாரதம் போர் என்று எதுவும் புரியாததால், பழியை பாரதத்தின் மீது போட்டுவிட்டு, பலூச்ச்சையும், ஆப்கானியர்களையும் எதுவும் செய்ய முடியாததால் இப்படி திருட்டு அடி அடிக்க வந்துவிட்டார்கள்.

இப்போது ஒரேயொரு வழி இருக்கிறது. வந்திருக்கும் அமெரிக்கனையும், உக்ரைன்காரனையும் நாம் கொல்லக்கூடாது. விசாரணை, விசாரணை என்று வைத்து அவனை வெறுப்பேற்றி, தூதரக உதவியை கோர முடியாதென்பதால், யாரையும் சந்திக்க முடியாமல் செய்து, ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரணையை பதிவு செய்து வெளியிட்டு எங்களை அனுப்பியது அமெரிக்க சி ஐ ஏ மற்றும் உக்ரைன் அரசுதான் என்று சொல்ல வைத்துவிட்டால் போதும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்துவிடலாம்.

உலக பயங்கரவாதி அமெரிக்காவுக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு மனமெல்லாம் கிடையாது என்பது ஒரு புறம். ஆனால், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் லாபி செய்து, என்ன காரணத்துக்காக உலக நன்மையை உத்தேசித்து, உழைத்து முன்னேற துடிக்கும் ஒரு நாட்டுக்கு எதிராக, பயங்கரவாதத்தை தூண்ட ஆட்களை அனுப்பினீர்கள் என்று கேட்டு இதற்கு நேரடி பொறுப்பேற்று அதிபரை ராஜினாமா செய்ய சொல்லி தூண்டலாம். அமேரிக்கா சென்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அல்லது பெரிய பத்திரிக்கைகளை இங்கு வரவழைத்து அவர்களுக்கு பேட்டி அளித்து தலைகுனிவை ஏற்படுத்தலாம்.

இதே வேலையை உக்ரைனுக்கும் செய்ய வேண்டும். நாட்டை ஒழுங்காக ஆண்டு, பக்கத்து நாடான ரஷியாவுடன் நட்பு பூணாமல் சண்டை போட்டு பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து வரும் பைத்தியம், சம்பந்தமே இல்லாத பாரதத்தில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது, போரை தூண்டுகிறது என்று கலகம் செய்யலாம்.

ஆனால், ஒன்று நிச்சயம். இவ்வளவு பலம் குறைந்த எதிரி என்று மியான்மாரை நினைக்கவே கூடாது. அப்படி நினைக்காமல் கவனமாக இருந்ததால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாமனிதர்களுக்கு நன்றி.

  • ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories