lava - 2026

Lava X2: சிறப்பம்சங்கள்..!

வணிகம் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
lava - 2026

உள்நாட்டு பிராண்டான லாவா (Lava) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோனான Lava X2 மொபைலை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நிறுவனத்தின் X-சீரிஸில் முதல் ஸ்மார்ட் ஃபோன் ஆகும். இது குறைந்த பட்ஜெட்டில் சிறந்த மொபைலை வாங்க விரும்புபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Lava கூறி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் ஃபோன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.

மீடியாடெக் சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் வரும் மார்ச் 11 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஃபோன் ஆன்லைனில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட Lava X2 மொபைல் ரூ.6999 என்ற கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் வரும் மார்ச் 11-ஆம் தேதி வரை Amazon-ல் ப்ரீ-ஆர்டரில் கிடைக்கும்.

இதன் போது நீங்கள் இந்த மொபைலை வாங்க ப்ரீ-புக் செய்தால் நீங்கள் இந்த டிவைஸை ரூ.6599 என்ற சலுகை விலையில் வாங்கலாம். எனினும் மார்ச் 12-ஆம் தேதி இந்த ஸ்மார்ட் ஃபோன் விற்பனைக்கு வந்தவுடன், Lava X2 அதன் விலையான ரூ.6999-க்கு விற்கப்படும்.

புதிய Lava X2 மொபைலானது ப்ளூ மற்றும் சியான் (Cyan) உட்பட 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் அமேசான் மற்றும் லாவா இ-ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் வாங்க கிடைக்கும்.

Lava X2 ஸ்பெசிபிகேஷன்கள்:

Lava X2 மொபைலானது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் 6.5 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப். இதில் 8 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் ஃப்ரன்ட் ஸ்னாப்பர் உள்ளது. Lava X2 மொபைலில் 5,000mAh பேட்டரி பேக் உள்ளது.

முன்பக்கம் செல்ஃபி எடுக்க 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் Wi-Fi, Bluetooth v5.0, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இந்த, ஃபோன் 4G நெட்வொர்க்குகளில் 38 மணிநேர டாக் டைமையும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஃபுல் டிஸ்ப்ளே பிரைட்னசீழ் 10.5 மணிநேர யூடியூப் பிளேபேக்கையும் வழங்கும் என்று லாவா நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் லிஸ்ட்டிங்கின் படி, இந்த ஸ்மார்ட் ஃபோன் 165x76x9mm அளவையும், 192 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.