கொரோனா பரவலால்… இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பு!

Published:

online vegetables sales
online vegetables sales

கொரோனா என்ற வைரஸ் பரவலால் இப்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. கொரோனா அச்சத்துக்கு மத்தியில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்க என்று சொல்லிச் சொல்லி, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்துள்ளது. அது, மளிகை பொருட்கள், மின்சார பில்கள் மற்றும் வண்டி கட்டணங்கள் என அனைத்திற்குமான பயன்பாடாக மாறியிருக்கிறது .

2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளால் உருவாக்கப்பட்ட யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (Unified Payments Interface) பரிவர்த்தனைகளின் அளவு, கடந்த மாதம் பெரிதும் உயர்ந்திருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் ரூபாய் நோட்டுகளை கையாள மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஏப்ரல் மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில், வீழ்ச்சியடைந்த வங்கிகளிடமிருந்து மின்னணு நிதி பரிமாற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

“ஆன்லைனில் இதுவரை பில் செலுத்தாதவர்கள் கூட தற்போது ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள்! ஆன்லைனில் மளிகை சாமான்களை வாங்காதவர்கள் கூட தற்போது ஆன்லைனில் வாங்குகிறார்கள்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெகுநாட்களாகவே இந்தியாவுக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர முயற்சி செய்தது. அது இப்போது பலன் அளிக்கத் தொடக்கியிருக்கிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

கடந்த நவம்பர் 2016ல் மோடி திடீரென நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் மாற்று நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். ஊழலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது.

அப்போது மக்கள் ரூபாய் நோட்டுகளைப் பெற சிரமப்பட்டதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மாற்றாக உருவெடுத்தன. அவை தொடக்கத்தில் அதிக அளவைல் பரிவர்த்தனை செய்யப் பட்டன. ஆனால் புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் அளவு மீண்டும் உயர்ந்ததால் அவை பணமாகவே பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்நிலையில் இப்போது தொற்றுநோய், சமூக விலகல், ஒவ்வொருவருக்கும் இடையிலான இடைவெளியைப் பேணுதல் என்ற நிலையில், மக்களை எச்சரிக்கை அடையச் செய்து, ஆன்லைனுக்கு மாற்றியுள்ளது.

இப்போது ஆன்லைன் பயன்பாடுகள் மூலம் காய்கறிகள், பால், பழங்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி தேவைகளையும் வாங்குவதாகவும், பணத்தை பரிமாறிக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்று ஆபத்து ஏற்படலாம் என்பதால், அதனை தாம் விரும்பவில்லை என்றும் பலர் கூறுகின்றனர்.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தை இவ்வாறு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி, நுகர்வோருக்கு எளிய வசதியை அளிக்கிறது. அதே நேரம், இதில் பாதுகாப்பு அம்சங்கள் மேலும் உறுதிப் படுத்தப் பட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கே முழுமையாக மக்கள் மாறிக் கொள்ளும் காலமும் வந்துவிடும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img