பிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா? விஜய்-க்கு எழுந்த சந்தேகம்!

சினி நியூஸ் சினிமா
pikil 4 - 2026

பிகில், படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை தனது ரசிகர்களை தியேட்டரில் என்கேஜாக உட்கார வைக்க முடியுமா என இயக்குநர் அட்லியிடம் விஜய் கேட்க, என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் இயக்குநர்.

அட்லி இதுவரை எடுத்த படங்கள் காப்பி கதைகள் என்ற பட்டம் வாங்கியுள்ள நிலையில், இந்த படமும் பிரபல பாலிவுட் படம் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரும், அட்லியும் இது அந்த பாலிவுட் படத்தை தழுவி எடுக்கவில்லை என சாதித்து வருகின்றனர்.

படத்தின் கதை தனது என்று தற்போது புதிதாக ஒருவரும் கிளம்பியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கை விரைவில் முடித்துவிட்டு, பண்டிகை தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிரைலரிலேயே பல்லிளித்துள்ள நிலையில், படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருப்பதால், படம் வெளியான பிறகு, 20 நிமிட காட்சிகள் வரை வெட்ட நேரிடலாம் என்ற பயமும் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

பாடல்கள் இடத்தை பெரிதாக அடைக்கவில்லை என்றாலும், தேவையில்லாத பில்டப் ஷாட்டுகள், படம் நெடுகிலும் இருப்பதாகவும், அதனை இன்னமும் கருணை காட்டாமல் எடிட் செய்தால், ரசிகர்கள் அடிக்கடி இன்டெர்வெல் எடுக்காமல் தியேட்டரில் உட்காருவார்கள் என விஜய்க்கு நெருங்கியவர்கள் கூறியதை ஒட்டி, இயக்குநரிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளாராம் விஜய்.

சிஜி பணிகளில் உள்ள ஓட்டைகளை ஒட்ட வைத்து வரும் அட்லி, தணிக்கை சான்றிதழ் கிடைத்த பின்னர், விஜயிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி எழுந்துள்ளதால், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.