எலக்ட்ரிக் பைக்கின் விலை குறைப்பு!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
e bike - 2026

புனேவை சேர்ந்த டெக்னோ எலெக்ட்ரா இ ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

அவை நியோ, ரேப்டார் மற்றும் எமெர்ஜ் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களில் இவற்றின் விலையை குறைப்பதாக டெக்னோ எலெக்ட்ரா தெரிவித்துள்ளது.

மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.

மத்திய அரசு சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தது.

வரி குறைப்பைத் தொடர்ந்து பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை குறைப்பதாக அறிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.