படத்திற்கு படம் தோற்றத்தில் வேறுபாடு காட்டும் பார்வதி!

Published:

poo parvathi - 2026

புதிய படம் ஒன்றுக்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ள பார்வதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழில், பூ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. அடுத்து தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்தார்.

ஏராளமான படங்களிலும் நடித்துள்ள பார்வதி, சிறந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எதையும் வெளிப்படையாகப் பேசும் பார்வதி சமீபத்தில், ‘அர்ஜூன் ரெட்டி’ ஹீரோ விஜய தேவரகொண்டா முன், அந்தப் படத்தை பயங்கரமாக விளாசித் தள்ளியிருந்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது

parvathi 1 - 2026

பார்வதி, உயரே என்ற மலையாளப் படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதற்காகத் தனது தோற்றத்தை வித்தியாசமாக மாற்றியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அவர் நடிப்புக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது. அவர் இப்போது, அந்தாலஜி படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராச்சியம்மா என்ற அந்தப் படத்தை வேணு இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

parvthi - 2026

இதில் பார்வதியின் தோற்றம் யாரும் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆளே மாறி, அசல் கிராமத்துப் பெண்ணாக இருக்கிறார். அவரது இந்த லுக்கிற்கு ரசிகர்களும் திரைப்படத் துறையினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img