அடித்துக் கொன்று அறுவடை எந்திரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர்? உள்ளாட்சி தேர்தல் வெற்றி காரணமா?

கிரைம் நியூஸ் தமிழகம்
murder - 2026

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்மதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி அடித்து கொல்லப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகக் கூறப் படுகிறது.

murder 1 - 2026

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

policeinvestigation - 2026

இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் வார்டு உறுப்பினராகச் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் துணைத்தலைவர் பதவிக்காக அவர் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.