
சினிமாவில் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில் பெருவாரியான நேரத்தை சினிமாவிற்கே செலவிட்டு வந்த அனுஷ்கா, தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்ததால் ஐதராபாத்தில் வீடு வாங்கியே குடியேறி விட்டார்.
அதனால் தனது சொந்த ஊரான பெங்களூருக்கு கூட செல்வதை மறந்து விட்டு ஐதராபாத் வாசியாகி விட்டார் அனுஷ்கா.ஆனால், பாகுபலி-2 படத்திற்கு பிறகு படங்கள் குறைந்து விட்டதோடு உடல் எடையை குறைப்பதிலும் தீவிரமாக இருந்த அனுஷ்கா ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு குடியேறியிருக்கிறார்.
அதோடு, அதன்பிறகு பாகமதி, சைரா நரசிம்ம ரெட்டி, நிசப்தம் படங்களில் மட்டுமே நடித்ததால் தனது உறவினர்களின் இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறாராம்.
இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஜனவரி 31-ந்தேதி திரைக்கு வருவதால், மீண்டும் ஐதராபாத்திற்கு வரும் அனுஷ்கா, சங்கராந்தி விழா முடிந்து ஒரு வாரத்தில் நிசப்தம் பிரமோசன்களில் ஈடுபடுகிறாராம்.
அதற்காக ஐதராபாத், சென்னை, மும்பை என பல முக்கிய பகுதிகளுக்கு சென்று படத்திற்காக பிரமோசன் செய்யப்போகிறாராம் அனுஷ்கா. ஆக, ஒரு பெரிய இடைவேளைக்குப்பிறகு வெளியில் தலைகாட்டப்போகிறார் அனுஷ்கா.