அடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்! 3 மொழிகளில்…!

Published:

prabas - 2026

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய நடிகர் ஆகிவிட்டார். அதனால் அவர் பல கோடிகளில் தயாராகும் பிரமாண்ட படங்களில் நடிக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த சாஹோ படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்கிறார்.

யுவி கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவீஸ் தயாரிக்கிறது. ஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தெலுங்கு, தமிழ், இந்தி மொழியில் தயாராகும் படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

prabas 1 - 2026

இதில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பட்ஜெட் 200 கோடி என்கிறார்கள்.

கடந்த 11ந் தேதி ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது பிரபாஸ் தொடர்பான ஒரே ஒரு போட்டோவை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img