விஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…

Published:

jakan shaki - 2026

வித்யாபாலன், ஆக்‌ஷய்குமார், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன், கிரித்தி குல்ஹாரி உட்பட பலர் நடித்த இந்தி படம் மிஷன் மங்கள்.

இந்திய வரலாற்றில் ‘மங்கள்யான்’ விண்ணில் செலுத்தப்பட்டது முக்கியமான நிகழ்வு. அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது.

தமிழகத்தைச் சேர்ந்த ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை ஜெகன் சக்தி இயக்கி இருந்தார். இவர் சீனிகம், ஷிமிதாப் உட்பட சில படங்களை இயக்கிய ஆர்.பால்கியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து கவனிக்கப்பட்டார்.

jagan shakti - 2026

அடுத்து தமிழில் ஹிட்டான கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்த படம் கத்தி.

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்தார். அங்கும் இந்த படம் ஹிட்டானது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்தியில் விஜய் நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்க இருந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. இதனால் அடுத்த படத்துக்கான வேலையில் இருந்தார்,

இயக்குனர் ஜெகன் சக்தி. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை அறிந்தனர்.

mankal - 2026

மிகவும் சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இளம் இயக்குனர் ஒருவருக்கு இப்படி ஆகியிருப்பது இந்தி திரையிலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமாக பிரார்த்தித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img