கீர்த்தி சுரேஷ் கௌதம் மேனன் இயக்கத்தில் இணைகிறாரா?

Published:

kirthi suresh - 2026

கீர்த்தி சுரேஷை சீக்கிரமாக தமிழ் ரசிகர்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், நடிப்பில் தமிழில் தலைவர் 168, பெண்குயின் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக கடன் பிரச்சனையில் சிக்கி வந்த கெளதம் மேனன், தற்போது ஃபுல் ஸ்விங்கில் மீண்டெழுந்துள்ளார்.

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் புதிய புராஜெக்ட் ஒன்றில் கை கோர்த்துள்ளார்.

kirthi suresh - 2026

நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் படமான மைதான் படத்தில் நடித்து வந்தார். சில காரணங்களுக்காக திடீரென்று அவர நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பிரியாமணி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஒல்லியான கீர்த்தி சுரேஷின் முயற்சிகள் அனைத்தும் வீணானது.

பாலிவுட் கனவு நிறைவேற வில்லை என்றாலும், கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கீர்த்தி சுரேஷுக்கு வரிசை கட்டி படங்கள் காத்துக் கிடக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 168 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
kirthi suresh 1 - 2026

அதுமட்டுமின்றி, கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு புதிய முயற்சிகளை செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் சிறப்பான வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அறிமுக இயக்குநரான நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் மிஸ் இந்தியா படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. ஜகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், பூஜிதா, நதியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 6ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kowtham menon - 2026

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். உஷா தையல் மெஷின் விளம்பரம் படத்திற்கான ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார் கெளதம் மேனன். விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்., அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கெளதம் மேனன், மீண்டும் சூர்யாவுடன் படம் பண்ணும் பேச்சுவார்த்தையிலும் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related articles

Recent articles

spot_img