கொரோனா: மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு!

actor 1

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஹாலிவுட் நட்சத்திரங்களின் உயிரை எடுத்துக் கொண்டு வருகிறது. தினமும் யாராவது ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் கொரோனாவுக்கு உயிரிழந்து வரும் நிலையில்
கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 2 ஹாலிவுட் நடிகர்களும், 2 நடிகைகளும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இந்த வரிசையில் அடுத்து உயிரிழந்து இருப்பவர் நடிகர் ஜாய் பெனடிக்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ஏலியன்ஸ், தி ஒயிட் நைட், அபோகலிப்ட்ஸ் கோட் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். 68 வயதான ஜாய் பெனடிக், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு ஹாலிவுட் நடிகர்கள் அனுதாபத்தையும், அதிர்ச்சியையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :