யோகாவா பண்றீங்க? இப்படி பண்ணினா எத பாக்கிறது? நெட்டிசன்ஸ் புலம்பல்!

Published:

புதிய ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார்

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் ஒர்க் அவுட் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வீடுகளில் இருந்து வருகின்றனர். இதனால், வீட்டில் செய்யும் சமையல், ஒர்க் அவுட் போட்டோஸ் மற்றும் பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

3a4d394b15cd0d450464aafd0adf8dae - 2026

நடிகை மீரா சோப்ரா (நிலா)வும் தினமும் ஏதாவது ஒரு போட்டோ அல்லது டிக்டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கிளாமர் போட்டோ வைரலானது. இந்நிலையில், புதிய ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார். இந்த கிளாமர் வீடியோவை ஏராளமான நெட்டிசன்ஸ் லைக்ஸ் செய்துள்ளனர்.

42424f903a579f7c79b20418117350d6 - 2026

அதற்கு கேப்ஷனாக, நீங்கள் வாழ்க்கையில் எதை செய்தாலும் அதை எப்படிச் சிறப்பாக செய்வது என்பதை, யோகா உங்களுக்கு காண்பிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சில ரசிகர்கள், நீங்க சூர்ய நமஸ்காரத்தை தப்பா பண்றீங்க, அதை அப்படி செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் அதுல அந்த நாலாவது ஸ்டெப் தப்பு என்று தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

9aa618ca8810092f297c50fa968cf0a0 - 2026

சிலர், ‘இதைப் பார்த்தபிறகுதான் யோகா செய்யணும்னே தோணுது.. நீங்க இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தீங்கன்னா பார்த்துட்டே இருக்கலாம்’ என்றும் சிலர் வழிந்துள்ளனர். சிலர் உங்களோட நானும் கத்துக்கலாமா? என்றும் அப்படியே எங்க ஏரியாவுக்கு வந்து கத்துக்கொடுங்களேன் என்றும் கேட்டுள்ளனர்.

அதற்கு முன் அவரது இன்னொரு பதிவில், அனைவருக்குமானது என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். ‘அவளை, ஹாட் (hot)என்று அழைக்காதீர்கள். அழகி என்று அழையுங்கள். அவள் ஒரு பெண். கப்பில் இருக்கும் டீ அல்ல’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலர், அவனை கூல் என்று சொல்லாதீர்கள், ஹேண்ட்சம் என்று சொல்லுங்கள். ஏனென்றால் அவன் பையன். அவன் ரெப்ரிஜினேட்டர் அல்ல என்று பலர் கமென்ட் அடித்துள்ளனர்.

92dee0ef6fcf3e4d580c97074274ed9c - 2026

நடிகை மீரா சோப்ரா, தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர். அடுத்து, ஜாம்பவான், லீ, மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார்

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img