நீங்கள் பெற்ற வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்: அஜித்தை புகழ்ந்து தள்ளும் வனிதா!

சினி நியூஸ் சினிமா

27 வருடங்கள் முடிந்த விட்டதை 28YrsOfAjithismCDPBlast என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஜித் குமார். அதன் பின் சாக்லேட் பாய் வேடத்தில் பட திரைப்படங்களில் நடித்தார். காதல் கோட்டை, ஆசை, வாலி உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றன.

பில்லா, அமர்க்களம், தீனா, மங்காத்தா திரைப்படங்கள அவரை ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக மாற்றியது. தற்போது வீரம், வேதாளம், விஸ்வாசம் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்.

ff12da669222d5f3e22846d1fc6f2804 - 2026

அஜித்தின் முதல் திரைப்படம் 1993ம் ஆண்டு வெளியானது. எனவே, அவர் சினிமாவிற்கு வந்து 27 வருடங்கள் முடிந்த விட்டதை 28YrsOfAjithismCDPBlast என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை. நாம் ஒருவரும் ஒன்றாகத்தான் திரைத்துறைக்கு வந்தோம். நம் வாழ்வில் ஏற்றம் இறக்கம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். நீங்கள் பெற்ற வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்களை போன்ற எளிமையான, தாழ்மையான, நேர்மையான மனிதரை நான் சந்திக்கவில்லை. உங்களுக்கும், ஷாலினுக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு’ என பதிவிட்டுள்ளார்.
 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.