இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர்.
இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் கூறியிருப்பதாவது: ‘தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.