மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

Published:

vanitha

தமிழ் சினிமாவில், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, அதன் பின், பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வலம்வர முடியாமல் போனது.

இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். விஜயகுமாருடன் சொத்து பிரச்னை ஏற்பட்டு ஆணையர் அலுவலகம் வரை புகார் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் சர்ச்சை நாயகியாவே வலம் வந்தார். தற்போது, யூடியூப் சேனல் ஒன்றில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வரும் இவர், தனக்கு உதவியாக இருந்த சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பாலை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபத் ஹெலன், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார். ஆனால் இருவருக்கும் தற்போது வரை விவாகரத்து ஆகாத நிலையில், வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இணைய ஊடகத்தில் பேட்டியளித்திருந்த எலிசபெத் ஹெலன், தன்னுடைய கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், குடிப்பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதை முற்றிலுமாக மறுத்த வனிதா விஜயகுமார் பீட்டர்பால் குடிகாரர் அல்ல. அசைவ உணவு கூட சாப்பிடமாட்டார். டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர். எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன். அவர் ஆல்கஹால் இல்லாத வைன் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்று கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

திருமணம் முடிந்த கையோடு வனிதா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிடும் வீடியோக்கள் அதிக பார்வைகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

தனது மூன்றாவது திருமண சர்ச்சை தொடர்பாக வீடியோ வெளியிட்ட நடிகை வனிதா, எல்லோரையும் கிழித்து தொங்கவிட்டார்.

மிடில் கிளாஸ் மக்கள், கடவுள்கள் என யாரையும் விட்டு வைக்காமல் விமர்சித்து தள்ளியிருக்கிறார் . இந்நிலையில் அவரது சகோதரிகளை விடாமல் விளாசி தள்ளிய வனிதா ஹெலனுக்கு அவரது கணவர் கிடைக்கபோறதில்லை என்றும் தெனாவட்டாக கூறியிருக்கிறார்.

என் சிஸ்டர்ஸ் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். என் சொத்தெல்லாம் ஏமாத்தினாங்க என கூறியிருக்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

திருமணம் என்பது இரண்டு இதயங்களின், உண்மையான உணர்வுகளின், நிபந்தனையற்ற காதலின் சங்கமம். எனது பெயரைக் கெடுக்கவும், அவதூறு பரப்பவும், என்னிடமிருந்து பணத்தைக் கறைக்கவும் நினைப்பவர்கள், சுத்தமாக அக்கறையில்லாதவர்கள் வன்மத்தை உருவாக்க முயல்கின்றனர்.

நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 7 வருடங்களாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த, அக்கறை செலுத்த யாரும் இல்லாத ஒரு மனிதரை நான் சந்தித்தேன். அவர் திடீரென ஊடக வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர் பெயர் பலருக்குத் தெரிந்திருப்பதாலும், (விஷமிகள்) அதை தங்கள் சுயநலத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை.

பீட்டர் பாலும், நானும், கடவுள் முன்னிலையில் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால், நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை என்றால், அந்த எண்ணமும் இல்லையென்றால், நாங்கள் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பைத்தியக்காரத்தனமாகக் காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை.,

நாங்கள் இருவரும் சேர்ந்து மிகச் சந்தோஷமாக இருக்கிறோம். என்றும் இப்படி இருப்போம் நான் புனித பைபிளின் மீது செய்த சத்தியத்தின் பேரில், அவர் உடல்நிலை சரியில்லாதபோதும், ஆரோக்கியமாக இருக்கும்போதும், செல்வம் இருக்கும்போதும், இல்லாத நிலையிலும், அவருக்குத் துணை நிற்பேன். அன்பு செலுத்துவேன். மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தயவுசெய்து எந்த பொய்க் குற்றச்சாட்டுகளையும் நம்பாதீர்கள். இதுவும் கடந்து போகும்”.இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img