நெய்வேலி பாய்லர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; அமித் ஷா இரங்கல்!

Published:

neyveli boiler explode
neyveli boiler explode

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. இந்தச் சம்பவத்தில் உயிழந்தோர் தொடர்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img