பிக் பாஸ் ஸ்கிரிப்ட் படிதான் நடக்கிறதா? உண்மையை உடைக்கும் கஞ்சா கருப்பு!

இன்று எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.  சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.

கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு.

தற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.. இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் இதோ இப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

சரி.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்..

ஆமாம்.. பிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள்.. நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ்.. அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே..” என்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 22 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 21 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories